Press "Enter" to skip to content

இருளில் வசிப்பவர்களுக்கு விடியல் கிடைக்குமா? முதலமைச்சரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை!

வீட்டில் தனியே இருந்த மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாடைகை வீட்டில் இருந்த அக்கா-தம் 

பி இருவர் கைது. வீட்டை காலி செய்த நிலையில் புதிதாக வீட்டிற்கு லீசுக்கு வந்தவர்கள் கொடுத்த 3 லட்சத்தை திருடியபோது அதை தடுத்த மூதாட்டியை கொலை செய்ததாக இருவரும் வாக்குமூலம். 

சென்னை தரமணி கம்பர் தெருவை சேர்ந்தவர் 65-வயதான சாந்தகுமாரி என்ற மூதாட்டிக்கு இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடிந்த நிலையில் அருகில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (12ம் தேதி) காலை 6 மணிக்கு அவரது வீட்டு வாசலில் மூதாட்டி சாந்தகுமாரி கோலம் போட்டு விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.

 

பின்னர் 8 மணிக்கு புடவை வியாபாரி ஒருவர் வீட்டின் கதவை தட்டியுள்ளார். மூதாட்டி வெளியில் வரவில்லை, நீண்ட நேரம் கதவை தட்டியதால் மூதாட்டியின் பேரன் பக்கத்து வீட்டில் இருந்து வந்து கதவை திறந்து பார்த்தபோது மூதாட்டியின் கண்ணத்தில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

 

பின்னர் கூச்சலிட்டபடி வீட்டை விட்டு வெளியே வந்த சிறுவன் முதலில் அவரது பெற்றோரிடம் தகவல் கூறியுள்ளார்.  

பின்னர் இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் தரமணி காவல் துறையினர் காலை 9:30 மணிக்கு சம்பவ இடத்திற்க்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப் 

பி வைத்தனர். 

மேலும் படிக்க | திமுகவினரை எத்தனை நாள் கண்டும் காணாமல் இருப்பீர்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

 

பின்னர் இச்சம்பவம் குறித்து 4 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் இருந்த 3 லட்ச ரூபாய் பணமும் மாயமாகி இருந்ததால் காவல் துறையினர் பலத்த சந்தேகம் எழுந்தது பணத்திற்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டிருப்பாரா இல்லை வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் தனிப்படையினர் தங்களது விசாரணையை துவக்கினார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சி. 

பி.சக்ரவர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

 

பின்னர் சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகில் உள்ள கண்காணிப்பு தொலைக்காட்சி ஒளிக்கருவி (கேமரா) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் எந்த தடையங்களும் கிடைக்காததால்  

பின்னர் மோப்ப நாய் ஜான்சி மற்றும் கைரேகை நிபுணர்களை சம்பவ இடத்திற்கு வரவைக்கப்பட்டு கைரேகை மற்றும் தடையங்களை பதிவு செய்தனர். 

 

பின்னர் மூதாட்டி வீட்டின் முதல் மாடியில் கடந்த 3 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வந்தவர்க வீட்டை காலி செய்து கிளம் 

பியபோது கொலை நடைப்பெற்றதால் போலீசாரின் சந்தேகம் அவர்களின் பக்கம் திரும்ப விஜயபாஸ்கர் அவரது மனைவி, மகள் ஸ்ரீசா மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மகன் ஆகிய நான்கு பேரிடமும் தனி தனியே விசாரணையை துவங்கினர். 

மேலும் படிக்க | போதிய விலை கிடைக்காததால் குப்பையில் கொட்டப்படும் தேங்காய் மட்டைகள்

விசாரணையில் குடும்பமே முன்னுக்கு  

பின் முரணாக தகவல்களை பதிவு செய்ததால் பலத்த சந்தேகமடைந்த காவல் துறையினர் இளம்பெண் ஶ்ரீஷா மற்றும் அவரது தம் 

பியான 12ம் வகுப்பு படிக்கும் சிறுவனிடம் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் தங்களை வீட்டை காலி செய்ய சொல்லி அடிக்கடி சண்டையிட்டதாகவும், நேற்று வீட்டை காலி செய்தபோது வாடகைக்கு வரும்போது முன்பணமாக கொடுத்த ரூபாய் 30 ஆயிரத்தை திருப் 

பி கேட்டபோது 30 ஆயிரம் தராமல் பல்வேறு குறைகளை கூறி ரூபாய் 8 மட்டும் மூதாட்டி அக்கா தம் 

பியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் 30 ஆயிரத்திற்கு பதிலாக 8 ஆயிரம் கொடுத்ததால் மூதாட்டிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் அப்போது மூதாட்டி சிறுவனை கடிக்க வந்துள்ளதாகவும், உடனே மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு சண்டையிட்டுள்ளனர்.  

பின்னர் ஸ்ரீஷா துப்பட்டாவல் மூதாட்டியின் கழுத்தை இறுக்கியுள்ளார். சிறுவன் கண்ணத்தை கடித்ததில் மூதாட்டி உயிரிழந்ததாக வாக்குமூலம் அளித்ததாக காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்ததுள்ளதாக தெரிவித்தனர். 

மேலும் மூதாட்டி வீட்டிற்கு புதிதாக வாடகை வரவிருந்தவர்கள் லீசுக்கு கொடுத்த ரொக்க பணம் ரூபாய் 3 லட்சம் மூதாட்டி வீட்டில் இருந்ததும், மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவரது வீட்டில் இருந்த ரூபாய் 3 லட்சத்தை திருடிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பின்னர் அக்கா-தம் 

பி மற்றும் இவர்கள் செய்த கொலையை மறைத்து அடைக்கலம் கொடுத்த தாய் என மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவர்கள் திருடி சென்ற ரூபாய் 3 லட்சத்தை பறிமுதல் செய்தனர். 

வாடகை வீட்டில் இருந்த அக்கா-தம் 

பி சேர்ந்து தனியாக இருந்த வீட்டின் உரிமையாளரான மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »