Press "Enter" to skip to content

தலைமை செயலக முற்றுகை… விவசாயிகள் கைது!!!

மாமேதை காரல் மார்க்சின் நினைவு தினத்தை ஒட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி உறுப்பினர்கள்
ஆகியோர் காரல் மார்க்ஸ் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

 மார்க்ஸ் – உலகம் உணரும்

1883 ஆம் ஆண்டு மார்க்ஸ் லண்டனில் இறந்த போது அவருடன் பயணித்த ஏங்கல்ஸ், மார்க்ஸ் இறந்த பிறகு அவரின் பங்களிப்பு குறித்து இந்த உலகம் உணரும், என்று சொன்னார். 

உலக அளவில் முதலாளித்துவம் எப்படி இயங்குகிறது, சுரண்டல் எப்படி ஏற்படுகிறது, உபரி மதிப்பு உருவாவது குறித்தும் எழுதியவர் மார்க்ஸ் என்று பாராட்டினார்.ஜெர்மன் என்ற குடியுரிமையை கைவிட்டார். நாடட்டரவராக தான் லண்டன் சென்றார் அப்படி தான் இறந்தார். ஆனால் இன்று உலகமே அவரை கொண்டாடுகிறது.இன்று தமிழ்நாடு முழுவதும் இந்த நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

கடந்த காலத்தில் மக்கள் சந்தித்த சமூகம், மதம், பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு கண்டறிந்தவர் மார்க்ஸ் என்றார். தொடர்ந்து, பேசிய அவர் உலகம் முழுவதும் இடதுசாரிகளை மக்கள் நிராகரிப்பதாக அமித்ஷா சொல்லும் கூற்று தவறானது,லத்தின் அமெரிக்க நாடுகளில் கியூபாவில் மட்டும் தான் இடதுசாரி கம்யூனிஸ்ட் ஆட்சி இருந்தது. 

இப்போது பிரேசில் பொலிவியா உள்ளிட்ட நாடுகளிலும் கம்யூனிசம் உள்ளது.

பாஜகவுக்கும் ஆர் எஸ் எஸ் மாற்ற்ய் இடதுசாரி இயக்கம்

இந்தியாவில் பாஜகவுக்கும், ஆர் எஸ் எஸ் க்கும் மாற்றாக இடதுசாரி இயக்கம் சரியான கொள்கையை முன் வைக்கிறது அது குறித்து அச்சப்படுவதால் தான் அமித்சா அப்படி சொல்கிறார்.கணினிமய ரம்மி தொடர்பாக, மாநில அரசின் அவசர சட்டத்தில் ஆளுநர் கையெழுத்து போட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 44 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஆளுநர் அந்த குடும்ப உறுப்பினர்களை விசாரிப்பதற்கு பதில் அந்த ரம்மியை நடத்துபவர்களை அழைத்து பேசுகிறார். இது மனிதாபிமானத்திற்கு விரோதமானது.

கையெழுத்து போடுவது தான் சட்ட விதி

மத்திய அரசாங்கத்தை பொறுத்த வரையில் பாஜக அல்லாத ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்வார்கள். அப்படி இல்லை என்றால் ஆளுநரை வைத்து ஆட்சியை சீர்குலைக்க முயற்சி செய்வார்கள்.தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்தில் மீண்டும் கணினிமய ரம்மி குறித்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் அவர் கையெழுத்து போடுவது தான் சட்ட விதி என்றார்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »