Press "Enter" to skip to content

சென்னை வெள்ள இடர் குழு அறிக்கை… பலன் என்ன?!!

இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பு தடுப்பது நடவடிக்கை மற்றும் கட்டுப்படுத்துவது குறித்த வழிகாட்டுதல்களை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்கள் சுகாதார இணை இயக்குனர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இன்ஃப்ளூயன்ஸா:

இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்புக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை வெளியிட்டுள்ளது.  இன்ஃப்ளூயன்ஸா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) எனபது ஒரு ஆர்என்ஏ நச்சுநுண்ணுயிர் (வைரஸ்), இது A, B, C என 3  வகைகள் உள்ளன.  பருவகால இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் AHINI, H3N2, H2N2 போன்ற இன்ஃப்ளூயன்ஸா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)களால் ஏற்படுகிறது.  பருவகால காய்ச்சல் எல்லா வயதினரையும் பாதிக்கலாம், குறிப்பாக குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.  

பரவும் முறை:

இந்த வகை நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு காற்று மூலம், இருமல் மற்றும் தும்மலின் மூலமும் பரவலாம் எனவும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு நான்கு நாட்கள் வரை அதன் வீரியம் இருக்கும்.  அதேபோல ஏழு நாட்கள் வரையிலும் அறிகுறிகள் காணப்படும். 

இன்ஃப்ளூயன்ஸா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) அறிகுறிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை:

வகை A

லேசான காய்ச்சல் மற்றும் இருமல், தொண்டை வலி, தலைவலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி அறிகுறிகளாக இருக்கும்.  அவர்களுக்கு காய்ச்சலுக்கான பரிசோதனை தேவையில்லை.  வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். 

வகை B

அதிகபடியான காய்ச்சல் அல்லது கடுமையான தொண்டை வலி அறிகுறிகளாக இருக்கும்.  5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், கர்ப்பிணி பெண்கள், இணை நோய்களைக் கொண்ட நபர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.  இந்த வகையிலும் காய்ச்சலுக்கான பரிசோதனை தேவையில்லை, வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

வகை C

மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, தூக்கமின்மை, இரத்த அழுத்தம், இரத்தத்தில் சளி கலந்திருப்பது, நகங்களின் நீல நிறமாற்றம்.  ஃப்ளூ சோம்னோலன்ஸ், உயர் மற்றும் போன்ற நோய் போன்ற அதிகப்படியான காய்ச்சல் உள்ளிட்டவை அறிகுறிகளாக இருக்கும். 

 அப்படி இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும். 

வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்:

A மற்றும் B வகை நோயாளிகள்  வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட  அறையில் இருக்க வேண்டும், வீட்டில் இருப்பவர்களுடன் ஒன்றாக இருப்பதை தவிர்க்க வேண்டும்.  இருமல் அல்லது தும்மல் வரும் பொழுது முக கவசம் அணிந்திருக்க வேண்டும் தனி மனித இடைவெளியையை கடைபிடிக்க வேண்டும்.  அடிக்கடி கை கழுவ வேண்டும்.

வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது மூச்சுத் திணறல் உள்ளிட்ட அதிகப்படியான அறிகுறிகள் ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக 104 அல்லது 108 தொடர்பு எண்ணை அழைத்து மருத்துவமனைக்கு சென்று உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.

இன்ஃப்ளூயன்ஸா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசியை தற்பொழுது மருத்துவ பணியாளர்கள் மட்டுமே பயன்படுத்துவதற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது தேவைப்பட்டால் இணைநோய் இருக்கக்கூடியவர்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதத்தில் இருந்து எட்டு வயதுக்கு உள்ள குழந்தைகள் போட்டுக் கொள்ளலாம். 

இன்ஃப்ளூயன்ஸா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்புக்கு உள்ளான பெரியவர்களாக இருந்தால் ஏழு நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் குறைந்த பிறகு வெளியே வரவேண்டும் அதேபோல குழந்தைகளாக இருந்தால் 14 நாட்களுக்கு பிறகு தான் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு வெளியே வரவேண்டும். 

இந்த அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற அனைத்து மாவட்ட மருத்துவ அலுவலர்கள், இணை இயக்குனர்கள் பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பொது சுகாதார மற்றும் நோய் திறப்பு துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க:   கேஸ்ஸை திறந்து விட்டு சிலிண்டரை வெடிக்க வைத்த கணவர்…. தப்பியோட்டம்!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »