Press "Enter" to skip to content

அதிகரிக்கும் வெப்ப அலை…எதிர்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சுகாதாரத்துறை!

சென்னை வண்டலூர் அருகே விதிகளை மீறி செயல்படும் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தாக்கல் மனு:

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரியைச் சேர்ந்த விஜய்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தங்கள் கிராமத்தில் சட்டவிரோதமாக குவாரி நடத்தப்பட்டு வருவதாகவும், அருகிலேயே வண்டலூர் உயிரியல் பூங்கா, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, நீர் நிலை போன்றவை இருப்பதை மறைத்து குவாரி நடத்த சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த குவாரியால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு மாறி விட்டதால் சம்பந்தப்பட்ட குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

கூட்டுக்குழு:

இந்த புகார் குறித்து விசாரிக்க கூட்டுக்குழுவை அமைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது.  அதன்படி கூட்டுக்குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தது.  அதில், அந்த குவாரியில் குறிப்பிட்ட அளவை விட அதிகளவு கல் மற்றும் மணல் எடுக்கப்பட்டுள்ளது என்றும்,  சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குவாரி செயல்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் இழப்பீடாக ஒரு கோடியே 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்க வேண்டும்’ எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தீர்ப்பு:

இந்த வழக்கை விசாரித்த இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர்,  ‘சுற்றுச்சூழல் இழப்பீடாக நிர்ணயிக்கப்பட்ட தொகையை வசூலிக்க வேண்டும் என கூட்டுக்குழு அளித்த பரிந்துரையில் இடைக்கால இழப்பீடாக 50 சதவீத தொகையை குவாரி உரிமையாளர் 3 மாதத்துக்குள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  இந்த தொகையின் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்ய தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சட்டவிரோதமாக குவாரி செயல்படுவதை தடுக்கும் வகையில், அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். 

மேலும், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட இதர அனுமதிகளை ரத்து செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என்றும், குவாரி மீது சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கவும், அந்த குவாரியை கருப்பு பட்டியலில் சேர்க்கவும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க:    காலை உணவுத் திட்டத்தால் அதிகரித்த வருகைப் பதிவேடு…!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »