Press "Enter" to skip to content

இது திட்டமிட்டு செய்கின்ற ஏமாற்றம்….!!

அகவிலைப்படி வழங்க வேண்டும் என்ற போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது.  முதலமைச்சர் இதற்கு தீர்வு காண வேண்டும்.

கண்டன உரை:

அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் வழங்கிட வேண்டிய மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்தவும் தலைமைச் செயலகத்தை நோக்கி மாபெரும் பேரணி பல்லவன் இல்ல முன்பு நடைபெற்றது.  

இதில்  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டன உரை ஆற்றினார். இந்த முற்றுகைப் பேரணியில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியர்கள் 2000 மேற்பட்டோர் வருகை புரிந்துள்ளனர்

சீமான் உரை:

ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியர்கள் அகவிலைப்படி நிறுத்தமில்லாமல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடுகிறார்கள் இது நியாயமான கோரிக்கை எனக் கூறினார்.  வடமாநில தொழிலாளர்கள் பற்றி அவதூறு  பேசியதாக சீமான் மீது வழக்கு பதிவு குறித்த கேள்விக்கு, பிரசாந்த் கிஷோருக்கு தமிழகத்தை பற்றி தெரியுமா ? என்றும் தமிழர்களை சுட்டுக் கொல்லும் பொழுதும் மீனவர்களை சிறைபிடிக்கும் போதும் அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என கேள்வி எழுப்பினார்.

வழக்கு:

மேலும் வட இந்தியர்கள் தான் தமிழக இளைஞர்களை தாக்குகிறார்கள் எனவும் திருப்பூரில் கட்டையை தூக்கிக்கொண்டு தமிழர்களை அடித்தது யார்? எனக் கூறிய அவர் பிரஷாந்த் கிஷோர் பீகார் முதலமைச்சருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் நான் என் மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன் எனத் தெரிவித்தார்.  அதனால் வழக்குபதிவு குறித்து நான் கவலைப்படுவதில்லை அதை பொருட்படுத்தவும் இல்லை எனவும் கூறினார்.

எல்லாவற்றுக்கும் போராட்டம்:

மற்ற துறைகளில் உள்ளவர்களுக்கு அனைத்து அகவிலைப்படியும் தரப்படுகிறது.  ஆனால் போக்குவரத்து தொழிலாளர்கள் மட்டும் அனைத்து சலுகைகளும் நிராகரிக்கப்படுகிறது. தொலைவில் இருந்து பார்ப்பார்கள் இவர்களுக்கு வேலையே இல்லை எல்லாத்துக்கும் போராட்டம் செய்வார்கள் என கடந்து செல்வார்கள் எனத் தெரிவித்தார் சீமான்.

வாழ்க்கையே..:

தங்களுக்கு தேவையான கோரிக்கைகளை எடுத்து போராட்டமாக செய்துதான நிறைவேற்றும் என்பதற்காக போராடுகிறார்கள் எனவும் மற்றவர்களுக்கு அவ்வப்போது போராட்டங்கள் நம் மக்களுக்கு வாழ்க்கையை போராட்டமாக மாறியிருக்கிறது எனவும் கூறினார்.

100 நாட்களில்:

ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றவர் என்று கூறினார் எனவும் ஆனால் மனுக்களை வாங்கி பூட்டிவிட்டு சாவி தொலைத்துவிட்டார் எனவும் தற்போது 600 நாட்கள் ஆகியும் எந்த ஒரு கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை எனவும் பேசினார்.

வாக்குக்கு பணம்:

மேலும் மக்களுக்கு என்ன தேவை என்று தெரியாமல் என்ன ஆட்சி செய்கின்றனர் அனைத்தையும் அதிகாரிகளின் மேல் பழியை போடுகின்றனர் எனவும் இந்தப் போராட்டத்தை டாஸ்மாக் ஊழியர்கள் செய்தால் அதனை உடனடியாக கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள்  எனவும் கூறினார்.

எங்களுக்கு அகவிலைப்படியை கொடுப்பதற்கு பணம் இல்லை எனக் கூறிய சீமான் ஆனால் தேர்தலில் வாக்குக்கு 4000 வரை பணம் கொடுப்பதற்கு எங்கு இருந்து பணம் வருகிறது என்பது தெரியவில்லை எனக் கேள்வியெழுப்பினார்.  

உடனடியாக:

100 நாட்களில் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என கூறியிருந்தனர் ஆனால் 600 நாட்கள் ஆகியும் கோரிக்கையை நிறைவேற்ற வில்லை உடனடியாக அவர்களின் உண்மையான கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்ற வேண்டும் எனவும் பேசினார்.

இதையும் படிக்க:   தாக்கப்பட்ட திருச்சி சிவா வீடு… நேரு காரணமா?!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »