Press "Enter" to skip to content

தந்தை இறந்தும், சோகத்தில் தேர்வை எழுதிய மாணவர்…

நாகை | நாடார் தெருவில் வசித்து வருபவர் கணேஷ்குமார். இவருக்கு சொந்தமான கைபேசி கடை நாகை வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகே உள்ளது. வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு 10,மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற இவர் நேற்று காலை கடையை திறக்க வந்துள்ளார். 

அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சடைந்தார். பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, ஷோகேஸில் அடுக்கி வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த 15, கைபேசிகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. 

மேலும் படிக்க | வடமாநில தொழிலாளியை தாக்கி பணம் பறித்த வழக்கில் மூன்று பேர் கைது! 

இது குறித்து கணேஷ்குமார் அளித்த புகார் பேரில் அங்கு வந்த வெளிப்பாளையம் காவல் துறையினர் கைரேகை நிபுணர்களை கொண்டு சோதனை நடத்தினர். மேலும் அப்பகுதி கடைகளில் உள்ள கண்காணிப்பு தொலைக்காட்சி ஒளிக்கருவி (கேமரா)வில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து திருடர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இதனிடையே கைபேசி கடை ஷட்டரை கட்டர் இயந்திரத்தால் உடைத்து, விலை உயர்ந்த கைபேசிகளை திருடி செல்லும் மர்ம நபரின் கண்காணிப்பு தொலைக்காட்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க | பைக்கில் வழிமறித்து 437 கிராம் தங்கம், ரூ.6 லட்சம் கொள்ளை… 

 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »