Press "Enter" to skip to content

புலிகள் வேட்டையாடி கைது: சாத்தியக்கூறுகளை ஆராய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, அடிமிதிப்பான்குளம் கிராமத்திலுள்ள கல்குவாரி விபத்தில் 4 பேர் உயிரிழந்தற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் தனியார் கல்குவாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு.

வழக்கு குறித்து தமிழ்நாடு தொழில் துறை செயலர், தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கம் துறை ஆணையர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

மேலும் படிக்க | புலிகள் வேட்டையாடி கைது: சாத்தியக்கூறுகளை ஆராய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

தனியார் குவாரி 
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பொன் காந்திமதிநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் தாக்கல் செய்த மனு.அதில், “திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, அடிமிதிப்பான்குளம் கிராமத்தில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.இந்த கல்குவாரியில் சட்டத்திற்கு புறம்பாக இரவும், பகலும் வெடிகள் வைத்து பாறைகள் தகர்க்கப்பட்டு எம்.சாண்ட் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இந்த கல்குவாரியில் 2022 மே 14ஆம் தேதி பாறைகளுக்கு வெடிகள் வைக்கும் பொழுது பாறைகள் சரிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 தனியார் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் மனு

எனவே, 4 உயிரிழந்த கல்குவாரி விபத்திற்கு காரணமான அதிகாரிகளான பாளையங்கோட்டை தாசில்தார் ஆவுடையப்பன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் வினோத், முன்னீர்ப்புள்ளம் காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன், கிராம நிர்வாக அதிகாரி ஜெயராமன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும், அரசாணையை மீறி வெடிபொருள்கள் பயன்படுத்திய தனியார் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் வழக்கு குறித்து தமிழ்நாடு தொழில் துறை செயலர், தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கம் துறை ஆணையர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »