Press "Enter" to skip to content

திமுக ஒன்றிய பெருந்தலைவரை கவுரவித்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர்…

சென்னை தியாகராயநகரில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்ட பத்மாவதி தாயார் கோயில் குடமுழக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

தானமாக வழங்கிய நிலம்:

ஜி.என்.செட்டி சாலையில், பழம்பெரும் நடிகை காஞ்சனா மற்றும் அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கிய இடத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டுள்ளது.  2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில், குடமுழுக்கு விழாவுக்காக கடந்த 12-ம் தேதி முதல் சிறப்பு பூஜைகளும், யாகங்களும், நடைபெற்று வந்தது.  

நேற்று காலை தாயார் சிலை கோயில் கருவறையில் பிரதிர்ஷ்டை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை 7.30 மணியளவில் மேளதாளங்கள் முழங்க, விமான கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. 

பக்தர்கள்:

குடமுழுக்குவை தொடர்ந்து 10 மணி முதல் 11 மணி வரை பத்மாவதி தாயார்-சீனிவாசா திருக்கல்யாணம், 11 மணி முதல் 11.30 மணி வரை ஆச்சர்யா, ரித்வியா பரிச்சார்கா போன்ற சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. 

 குடமுழுக்கு விழாவில் திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி உட்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி பார்வை செய்தனர். 

அன்னதானம்:

குடமுழுக்கையொட்டி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையில் இடைவிடாமல் அன்னதானம் வழங்கப்படும் என்றும், 15 ஆயிரம் பக்தர்களுக்கு இலவசமாக திருப்பதி லட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க:    “அவசியம் என்றால் டிடிவி தினகரனுடன்..விரைவில் சசிகலாவை..” ஓபிஎஸ் கூறியதென்ன?!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »