Press "Enter" to skip to content

சேதமடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை…

கோவை | காரமடை வனச்சரத்திற்குட்பட்ட ஆதிமாதையனூர், முத்துக்கல்லூர் உள்ளிட்ட கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதி அருகில் உள்ளது. இதனிடையே வனத்தில் இருந்து உணவு, குடிநீர் தேடி காட்டுயானை, சிறுத்தை, காட்டுப்பன்றி, புள்ளிமான் உள்ளிட்ட பல்வேறு அரியவகை வன விலங்குகள் குடியிருப்பு, விளை நிலங்களுக்குள் நுழைந்து பொது மக்களையும் விவசாயிகளையும் அவ்வப்போது அச்சுருத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. 

மேலும் படிக்க | சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம்… 

இதனிடையே கடந்த 3 நாட்களாக ஆதிமாதையனூர், முத்துக்கல்லூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் வனத்தில் இருந்து வெளியே வாயில் காயத்துடன் உடல் மெலிந்த நிலையில் மக்னா யானை ஒன்று விளை நிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இது தொடர்பாக சுற்றுவட்டார கிராம மக்கள் மக்னா யானையை உடனடியாக வேறு இடத்திற்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் சார்பில் ஒன்று திரண்டு வெள்ளியங்காடு, தோலம்பாளையம் –தாயனூர் பகுதியில் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். 

மேலும் படிக்க | சட்ட விரோதமான செங்கற்சூளைகள்… உத்தரவிட்ட நீதிமன்றம்!!! 

இதையடுத்து வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையே ஆணை மலை புலிகள் காப்பக இயக்குநர் ராமசுப்பிரமணியம் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் மேற்ப்பார்வையில் மாவட்ட வன கால் நடை மருத்துவர் சகுமாறன், சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால் நடை மருத்தவ அலுவலர் சதாசிவம் ஆகியோர் தலைமையில் 15 க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் நேற்று உடல் நிலை பாதிக்கப்பட்ட மக்னா யானைக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்தனர். 

மேலும் படிக்க | கொரோனா பாதித்தோரை இன்புளுயன்சா தாக்கினால் ஆபத்து – மருத்துவர்கள் எச்சரிக்கை! 

இதையொட்டி பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் சின்ன தம்பி கும்கி யானை வரவழைக்கப்பட்டு நேற்றிரவில் இருந்து யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே இன்று காலை மக்னா யானைக்கு சின்ன தம்பி கும்கி யானை உதவியுடன் மருத்துவ குழுவினர் முத்துக்கல்லூர் அருகில் பறையன் கோம்பை பகுதியிலுள்ள வனத்தில் மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் காரமடை சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஆஸ்கர் விருது எதிரொலி…’ரகு’ யானையை காண குவியும் வெளிநாட்டினர்! 

 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »