Press "Enter" to skip to content

தாம்பரம் சண்முகம் சாலையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்… காரணம் என்ன?!!

கிருஷ்ணகிரி | போச்சம்பள்ளி அடுத்த தாதம்பட்டி கிராமத்தில் உள்ள கூட்டுறவு பால் குளிர்விப்பு மையத்தின் எதிரே 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது மாடுகளுடன் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர். தனியார் பால் நிறுவனத்திற்கு இணையாக பால் விலையை உயர்த்தக்கோரியும், தீவன மூட்டைக்கு தமிழக அரசு மானியம் வழங்க கோரியும், 7 வாரங்களாக நிலுவையில் உள்ள தொகையை வழங்க கோரியும் வைத்து கோஷங்கள் எழுப்பி போராடினர். 

இதுகுறித்து விவசாயி மோகன் அவர்களிடம் கேட்டபோது, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 1985ம் ஆண்டு துவக்கப்பட்டது. இதில் 530 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். விவசாயிகள் தங்களது மாடுகளில் இருந்து பெறப்படும் பாலை கூட்டுறவில் ஊற்றி வந்தனர். பால் விலை ஏற்றாமல் இருந்த காரணத்தால் நஷ்டங்களை சந்தித்து வந்த விவசாயிகள் நாளுக்கு நாள் குறைந்து தற்போது 250 விவசாயிகள் பால் ஊற்றி வருகின்றனர். 

மேலும் படிக்க | இன்று முதல் ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்பபடாது…காரணம் என்ன?! 

இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 5000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தனியார் பால் நிறுவனங்கள் தற்போது லிட்டருக்கு ரூ.42 கொடுத்து வருகின்றனர். ஆனால் அரசு லிட்டருக்கு ரூ.33 கொடுக்கிறது. அந்த பணத்தையும் 6 முதல் 7 வாரங்கள் வரை நிலுவையில் வைத்துள்ளனர். கடந்த ஆண்டு தீவண மூட்டை சுமார் ரூ.800க்கு விற்கப்பட்ட நிலையல் அரசு மானியம் ரூ.250 வரை கிடைத்தது. ஆனால் தற்போது தீவன மூட்டை ரூ.1100 விற்கப்படும் நிலையில் அரசு மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

தனியார் பால் நிறுவனத்திற்கு இணையாக பால் விலையை உயர்த்தக்கோரியும், தீவன மூட்டைக்கு தமிழக அரசு மானியம் வழங்க கோரியும், 7 வாரங்களாக நிலுவையில் உள்ள தொகையை வழங்க கோரியும் போராட்ட நடத்தி வருகிறோம். போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்கவில்லை எனில் நாளை முதல் பால் நிறுத்தப்போராட்டத்தை செயல்படுத்த உள்ளோம் என தெரிவித்தார். 

மேலும் படிக்க | விதிகளை மீறி பால் விற்பனை செய்த 2000 சங்கங்களுக்கு அறிவிப்பு…விளக்கம் அளிக்காவிட்டால்…அமைச்சர் எச்சரிக்கை! 

 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »