Press "Enter" to skip to content

விளம்பரத்திற்காக விமர்சிக்கும் துணைநிலை ஆளுநர்…!!!

ஒரு மனைவி வைத்திருப்பவரே இன்று கவலையில் இருக்கிறார். ஆனால், இங்கு இரண்டு மனைவிகளை கட்டிக் கொண்டவர் ஒப்பந்தம் போட்டு வாழ்ந்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்! நம்ப முடியவில்லை என்றாலும் அது தான் உண்மை.

மத்திய பிரதேசத்தில் குவாலியர் என்ற நகரில் வசித்து வந்த பொறியாள ஒருவர், கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில், திருமணமான சில நாட்களிலேயே குவாலியரில் இருந்து குருகிராமிற்கு அந்த பொறியாளர் இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, அந்த இளைஞர் தனியே வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அவருடன் வேலை பார்த்த பெண் ஊழியரை காதலித்துள்ளார்.

மேலும் படிக்க | விழுப்புரம் மாவட்டம்….கல்லூரி மாணவி வெட்டிக் கொலை…!!

மேலும், கொரோனா காலக்கட்டத்தில், தனது முதல் மனைவிக்கு தெரியாமல் சக ஊழியரை திருமணமும் செய்து கொண்டுள்ளார். மேலும், அந்த திருமணம் குறித்து சிறிய அளவிலும் தனது முதல் மனைவிக்கு தெரியாமல் பார்த்துக் கொண்ட பொறியாளர், தனது இரண்டாம் மனைவியிடம் தனக்கு ஒரு முறை திருமணம் ஆகி விட்டது என்ற கதையையே மறைத்துள்ளார்.

முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகளும், இரண்டாவது மனைவிக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கும் நிலையில், ஒரு கட்டத்தில் இரு மனைவிகளுக்கும் உண்மை தெரிய வந்துள்ளது. தங்களது கணவன் தங்களை ஏமாற்றிய கவலை தாங்க முடியாமல் இருவரும் நீதிமன்றத்தை அனுகியுள்ளனர். 

மேலும் படிக்க | அவதூறு பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும்….!!!

குடும்ப நீதிமன்றத்தில், இந்த வழக்கை ஹரிஷ் திவான் என்ற வழக்கறிஞர் தனது கைகளில் எடுத்து நடத்தி வருகிறார். இதையடுத்து இரண்டு பெண்களையும் தனித்தனியே அழைத்து விசாரித்த பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு தீர்ப்பை வழங்கினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

வாரத்தில் 7 நாட்கள் அதில் 3 நாட்கள் முதல் மனைவியுடனும், 3 நாட்கள் இரண்டாவது மனைவியுடனும் கணவன் வசிக்க வேண்டும். மீதமுள்ள ஒரு நாள், அதிலும் அந்த விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அது அந்த கணவனின் விருப்பம். யாருடன் செல்கிறாரோ அது அவரது ஆசைப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.. அல்லது தன் சுகபோக வாழ்க்கைக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என வழக்கறிஞர் தீர்ப்பு வழங்கினார்.

இன்றைய காலத்தில் ஒரு மனைவிக்கே இளைஞர்கள் தடுமாறி மன்றாடி கண்ணீர் வடிக்காத குறையாக கதறும் நிலையில் இந்த வடமாநில இளைஞருக்கோ இப்படியொரு ஒப்பந்தம் போடப்பட்டது, 90ஸ் கிட்ஸ்களை நைன்ட்டி போட்டு அழும்படியாக வைத்துள்ளது. 

மேலும் படிக்க | கல்குவாரி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு – காரணமான அதிகாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »