Press "Enter" to skip to content

நாங்குநேரியில் மாநில அளவிலான பாரம்பரிய மல்யுத்த போட்டி..

உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு மாவட்டங்களில் முக்கிய இடம் வகிப்பது நீலகிரி மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு தமிழர்கள் மட்டுமின்றி இந்தியா மற்றும் உலகளவிலும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வண்டு செல்வது குறிப்பிடத்தக்கது.

அண்டை மாநிலங்களில் இருந்தும், சமவெளி பிரதேசங்களில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எடு தூரம் பயணிப்பதும், நீலகிரி தொட்டபெட்டா மலை பகுதிகளின் அழகை மொத்தமாக ரசிக்கவும், புதிய திட்டங்களைக் கொண்டு வரும் முயற்சியில் தமிழக அரசின் சுற்றுலா துறை ஈடுபட்டு வருகிறது. 

மேலும் படிக்க | குடியரசு தலைவர் கன்னியாகுமரி வருகை : சுற்றுலா பயணிகளுக்கு தடை

அந்த வகையில், இதன் ஒரு கட்டமாக தொட்டபெட்டா மலை சிகரத்தில் இருந்து மந்தாடா பகுதி வரை ரோப் தேர் கொண்டு வரும் திட்டத்தினை செயல்படுத்தும் வகையில், அதற்குண்டான சாத்திய கூறுகள் உள்ளதா என சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், சுற்றுலாத்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திப் நந்தூரி மற்றும் மேலாண்மை துறை இயக்குனர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, சுற்றுலாத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியபோது, தொட்டபெட்டா சிகரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுலா பயணி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் சூசைட் பாயிண்ட் பகுதிக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்காமல் தொட்டபெட்டா நிர்வாகம் தடை செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.

மேலும் படிக்க | ‘குறவன் குறத்தி‘ நடனத்தைத் போல (பறை) அடிப்பதையும் தடை விதிக்க வேண்டும் என திமுகவிற்கு வேண்டுகோள் விடுத்த விசிக!!!

 

இந்நிலையில், அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கும் வகையில் கட்டுமான பணிகள் நடைபெறும் எனவும், கோடை பருவம் துவங்கவுள்ள நிலையில் தொட்டபெட்டா சிகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் வசதிக்காக இரண்டு அதிநவீன தொலைநோக்கி கருவிகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக உதகை எச்.பி.எப் பகுதியில் அமைய உள்ள கேளிக்கை பூங்கா இடத்தினை ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பி அம்ரித், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

— பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | வெள்ளி நீர்வீழ்ச்சியில் தமிழ் பலகைகள் வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை…

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »