Press "Enter" to skip to content

இபிஎஸ்ஸை கட்சியை விட்டு விலக்க வேண்டும்….!!!

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக கோடை மழை வெளுத்து வாங்கியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.  

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது.  பல்வேறு பகுதிகளில் நூறு டிகிாி செல்சியசை தாண்டி வெயில் தாக்கியது. இதனால் பொதுமக்கள் பொிதும் அவதியடைந்து வந்தனா்.  இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கிய நிலையில் 2-வது நாளாகவும் மழை பெய்துள்ளது.  

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. 

அதேபோல் தஞ்சை மாவட்டம் பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சுமாா் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். 

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வார காலமாக 99 டிகிரி செல்சியஸ் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென அடைமழை (கனமழை) பெய்தது. இதன் காரணமாக வெப்பம் சற்று தணிந்து குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகலில் வெயில் சுட்டொித்த நிலையில் இரவு நேரத்தில் குளிா்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்ததால் குளிா்ந்த சூழல் நிலவி வருகிறது. இதேபோல் நிலக்கோட்டை  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. 

இதேபோல் புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த அடைமழை (கனமழை)யால் நகா் முழுவதும் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. தொடா்ந்து பேரிடர் மேலாண் துறை அதிகாரிகள் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

இதையும் படிக்க:   அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்…. ஓபிஎஸ் அணி வழக்கு!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »