Press "Enter" to skip to content

உதகையில் நாளை முதல் படப்பிடிப்பு நடத்த தடை…!

மதுரையில் மாடு தான் பிடிப்பார்கள், ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புலிவாலை பிடித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மதுரையில் எந்த தொழிலும் இல்லாத நிலையில் பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) வந்து என்ன பயன் எனவும், தொழில்பேட்டை தொடங்குங்கள் ஆஹா ஓஹா எனப் பாராட்டு கிடைக்கும் என்று கூறினார்.  

இதையும் படிக்க : வேல்முருகனின் கேள்விக்கு கடுப்படைந்த அமைச்சர் எம்.ஆர்.கே….!

இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களே அண்ணனை பார்த்து ஆஹா ஓஹோ என்றதாகவும், மதுரையில் மாடுதான் பிடிப்பார்கள், ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புலிவாலை பிடித்த படத்தை பார்த்து அசந்து போனேன் என கிண்டலடிக்க, அவையில் சிரிப்பலை எழுந்தது. 

தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரையில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டைடல் பார்க் அமைக்கவும், சிப்காட் தொழிற்சாலை அமைக்கவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »