Press "Enter" to skip to content

வரும் திங்கட்கிழமை இறுதி விசாரணையா? இடைக்கால நிவாரணமா? – ஓபிஎஸ் வழக்கு!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்தனர்.

 

இதுதொடர்பான மனுக்கள் மீதான விசாரணை இரு நீதிபதிகள் முன்னிலையில் தொடங்கி நடைபெற்றது. வழக்கை நேரடியாக இறுதி விசாரணைக்கு எடுத்து வாதங்களை கேட்டு உத்தரவு பிறப்பிக்க அனைத்து தரப்புக்கும் சம்மதமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையும் படிக்க : கலாஷேத்ரா விவகாரம் – சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம்!யாராக இருந்தாலும் நடவடிக்கை கட்டாயம்!!

அதனை தொடர்ந்து தனி நீதிபதி முன் நடந்த விசாரணையின் போது தன்னை கட்சியிலிருந்து  நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்த நடைமுறைகள் மட்டும் எப்படி சரியாகும் என்றும், இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. 

இதனையடுத்து விசாரணையின் முடிவில், வழக்கை வருகின்ற ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் இறுதி விசாரணையா,  இடைக்கால நிவாரணமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »