Press "Enter" to skip to content

கொளுத்தும் வெயிலில் பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள்…

கடந்த 2003 ஆம் ஆண்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கும் விதமாக அந்த குப்பைகளை சேகரித்து மூணார் அடுத்துள்ள கல்லார் பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிப்பதும் மற்றும் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளை வைத்து மறுசுழற்சி செய்வது உட்பட பலவிதமான திட்டங்களை செயல்படுத்தி வந்தது 

இப்படிபட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மூணாறு பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டு மலை போல் தேங்கி கிடக்கும் அபாயம் உருவானது.

மேலும் படிக்க | உதயநிதி ஒரு கத்து குட்டி அவருக்கு எதுவும் தெரியாது!!! ஆவேசத்தில் ஜெயக்குமார்

இதனால் அப்பகுதியில் அடிவாரத்தில் கல்லார் எஸ்டேட் பகுதியில் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு மார்பக புற்றுநோய், ஆஸ்துமா ,மூச்சு குழாய் பிரச்சனை, கல்லீரல் பாதிப்பு, உள்பட பலவித நோய்கள் உருவாக காரணமாகின்றன. 

இதனால்  அப்பகுதியில் உள்ள பெண்கள், பொதுமக்கள் மூணாறு பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து குப்பை கிடங்கு அருகில் போராட்டம் நடத்தினர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த மூனாறு பஞ்சாயத்து செயலாளர்  லஞ்சம் வாங்கி கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் மீது குற்றஞ்சாட்டினார்.

மேலும் படிக்க | சுங்க கட்டண உயர்வு கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்…

இதனால் கொதிதெழுந்த மக்கள் தாங்கள் யாரிடமும் லஞ்சம் பெறவில்லை எனவும் இது போல் கூறிய பஞ்சாயத்து செயலாளர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே அவரை இப்பகுதியில் இருந்து செல்ல அனுமதிப்போம் என்று கூறி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து தாம்  கூறியது  தவறு எனவும் இதற்கு முழுமையாக முழு மனதோடு மன்னிப்பு கேட்பதாகவும் பஞ்சாயத்து தலைவர் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.  இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மாலைமுரசு செய்திகளுக்காக செய்தியாளர் சுதிர் ரகவேந்திரா

மேலும் படிக்க | 73 ஆண்டு விவசாய நிலங்களுக்கு நிரந்தர பட்டா வேண்டி மனு…

 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »