Press "Enter" to skip to content

மார்க் ஜுக்கர்பர்கின் செல்ல மகள் தளர்நடை பயிலும் 360 டிகிரி வீடியோ

image

நியூயார்க்:

பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பர்க், சீனாவில் இருந்து அகதிகளாக வந்து அமெரிக்காவில் குடியேறிய தம்பதியருக்கு பிறந்த பிரிசில்லா சான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்(pediatrician) பட்டம் பெற்றுள்ள பிரிசில்லா ஜுக்கர்பர்க்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தார். அந்த குழந்தைக்கு மேக்ஸிமா சான் என ஜுக்கர்பர்க் தம்பதியர் பெயரிட்டனர்.

மேலும், தனது மகளின் பேரில் ஒரு இணையதள பக்கத்தை (domain name) உருவாக்கி வைத்திருந்த அமல் அகஸ்ட்டின் என்ற கேரள வாலிபரிடம் இருந்து 700 அமெரிக்க டாலர் விலைக்கு அந்த பக்கத்தை நிர்வகிக்கும் உரிமையை மார்க் ஜுக்கர்பர்க் வாங்கி இருந்தது நினைவிருக்கலாம்,

சமீபத்தில் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடிய மகள் மேக்ஸிமா சான் தவழும் பருவத்தை கடந்து மெதுவாக நடக்க தொடங்கியதும், ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்று மார்க் சிந்தித்தார்.

அந்தப் புதுமையை 360 டிகிரி கோணத்தில் வீடியோவாக பதிவு செய்த அவர் இன்று அந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நான் குழந்தையாக முதல் அடி வைத்து நடந்த தேதியை எனது தாயார் ஒரு குறிப்பேட்டில் பதிவு செய்திருந்தார். எனது சகோதரியின் குழந்தைகள் நடை பழகிய காட்சிகளை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்தார்.

மேக்ஸ் நடக்க தொடங்கியபோது அந்தக் காட்சி எனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அருகில் இருந்து பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். 360 டிகிரி கோண வீடியோவாக பதிவு செய்யப்பட்ட காட்சி.., உங்களுக்காக.., என்று மார்க் ஜுக்கர்பர்க் குறிப்பிட்டுள்ளார்.

நவீன தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவின் பக்கவாட்டில் ‘மவுசை’ வைத்து சொடுக்கினால் அந்த அறை முழுவதும் 360 டிகிரி காட்சியாக தெரிவது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோவைக் காண., https://www.facebook.com/zuck/videos/10103341324041631/

More from செய்திகள்More posts in செய்திகள் »