Press "Enter" to skip to content

கிச்சன் கீர்த்தனா: பச்சைப்பயறு தால்3 நிமிட வாசிப்புபச்சைப்பயற்றின் தாயகம் இந்தியா மற்றும் ஆசியா என்று கூறப்படுகிறது. இந்தியாவில் அதிக அளவில் இது பயிர…

பச்சைப்பயற்றின் தாயகம் இந்தியா மற்றும் ஆசியா என்று கூறப்படுகிறது. இந்தியாவில் அதிக அளவில் இது பயிரிடப்படுகிறது. தமிழர் சமையலில் பச்சைப்பயறு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சூடான சாதத்தில் பச்சைப்பயறு தால் உடன் நெய் சேர்த்துச் சாப்பிட, மிகவும் பிரமாதமாக இருக்கும். நீங்களும் செய்து அசத்துங்கள்.

என்ன தேவை?

பச்சைப்பயறு – ஒரு கப்

சின்ன வெங்காயம் – 10 (தோலுரித்து நறுக்கவும்)

தக்காளி – ஒன்று

பச்சை மிளகாய் – 3 (நறுக்கவும்)

சீரகம் – ஒரு டீஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

உளுந்து – அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

நெய் அல்லது எண்ணெய் – தாளிக்கத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

பச்சைப்பயற்றை வாணலியில் வாசனை வரும் வரை வறுத்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். பின்னர் வாணலியில் நெய் அல்லது எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். பிறகு சிறிதளவு தண்ணீர், கால் டீஸ்பூன் உப்பு, வேகவைத்த பச்சைப்பயறு சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: பச்சைப்பயறு சுண்டல்

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »