Press "Enter" to skip to content

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி.. உத்தேச இந்திய அணி

இந்தியா – நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

ஆக்லாந்தில் நடந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியில் 204 ரன்கள் என்ற கடின இலக்கை 19வது ஓவரிலேயே எட்டி அபார வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் நியூசிலாந்தை 132 ரன்களுக்கு சுருட்டி, 133 ரன்கள் என்ற எளிய இலக்கை அசால்ட்டாக அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வென்றால் இந்திய அணி தொடரை வென்றுவிடும். அதேநேரத்தில் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க, இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து அணி உள்ளது. 

மிக முக்கியமான இந்த போட்டிக்கான இந்திய அணியில், எந்த வித மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த காம்பினேஷனில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே இந்திய வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டுள்ளனர். அதனால் அணியில் எந்த மாற்றமும் இருக்காது. முதலிரண்டு போட்டிகளில் ஆடிய அதே அணி தான் இந்த போட்டியிலும் களமிறங்கும். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஷிவம் துபே, ஜடேஜா, ஷர்துல் தாகூர், சாஹல், ஷமி, பும்ரா. 
 

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »