Press "Enter" to skip to content

பண இயந்திரம் வாசலில் 100 பேர் இறந்தாங்கன்னா… ஷாஹீன் பாக்கில் ஏன் யாரும் சாகவில்லை.. பாஜக தலைவர் சுளீர்

கொல்கத்தா: ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நடவடிக்கையின் போது வங்கி ஏஎடிம் முன்பு வரிசையில் நின்ற மக்களில் 100 பேர் இறந்துவிட்டதாக மம்தா பானர்ஜி சொல்கிறாரே, ஏன் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஷாஹீன் பாக் போராட்டத்தில் ஒருவர் கூட சாகவில்லை என மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் பகீர் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து முஸ்லிமல்லாதவர்கள் குடியேறி இருந்தால் அவர்களை இந்திய குடிமக்களாக மாறுவதை எளிதாக்கும் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்தை கடந்த டிசம்பரில் மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த சட்டத்தை மத்திய அரசு இயற்றிய கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலே நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஏனெனில் போராடுபவர்களின் பார்வையில், குடியுரிமை திருத்த சட்டம் நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது என்றும், தேசிய குடிமக்களின் பதிவேடுடன் இயற்றப்படும்போது நாட்டின் முஸ்லிம் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்றும் கூறுகிறார்கள்.

imageபாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க 7 அல்லது 10 நாட்கள் போதும்.. அதற்கு மேல் வேண்டாம்.. மோடி ஆவேசம்

தொடர் போராட்டம்

இப்போது ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஷாஹீன் பாக் நகரில் போராட்டம் தொடர்ந்து நடந்த வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்களின் தேசிய பதிவு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களின் முகமாக ஷாஹீன் பாக் மாறியுள்ளது. பெண்கள், குழந்தைகள் என பலரும் விடாமல் அமர்ந்து போராடி வருகிறார்கள். இதேபோல் சில வாரங்களாக கொல்கத்தா, மும்பை மற்றும் உத்தரபிரதேசத்தின் பிரயாகராஜ் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் இதேபோன்ற போராட்டங்கள் அதிகரித்து வருகிறது.

ஏடிஎம் வாசலில்

இந்நிலையில் கொல்கத்தா பத்திரிக்கையாளர் மன்றத்தில் மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது வங்கி ஏஎடிம் முன்பு வரிசையில் நின்ற மக்களில் 100 பேர் இறந்துவிட்டதாக மம்தா பானர்ஜி சொல்கிறாரே, ஏன் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஷாஹீன் பாக் போராட்டத்தில் ஒருவர் கூட சாகவில்லை.

யாரும் சாகவில்லை

எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஏடிஎம் வாசலில் வரிசையில் நின்றபின் மக்கள் இறந்து கொண்டிருந்ததாக கூறினார்கள். ஆனால் இப்போது பெண்களும் குழந்தைகளும் 4-5 டிகிரி செல்சியஸ் வரை குறைந்த வெப்பநிலையில் அமர்ந்திருக்கிறார்கள், ஆனால் யாரும் இறக்கவில்லை. அவர்களுக்கு அப்படி என்ன வேண்டியிருக்கிறது ? நான் ஆச்சரியப்படுகிறேன் ! அவர்களின் எதிர்ப்பை பார்த்து (போராடுவதை பார்த்து)?

உண்மை வரும்

ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னணியில் ஏதேனும் நோக்கம் இருக்கலாம். ஷாஹீன் பாக் பற்றி மக்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர், ஏனெனில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இரவும் பகலும் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிலர் தினமும் 500 ரூபாய் பெறுகிறார்கள் என்று கூறுகிறார்கள். இது இருக்கலாம் அல்லது அவ்வாறு இல்லாமலும் இருக்கலாம். ஆனால் பாப்பலர் பிரண்ட் ஆப் இந்தியா பற்றிய உண்மை வெளிவந்துள்ளது. ஷாஹீன் பாக் பற்றிய உண்மையும் வெளிப்படும். அதில் உள்ள உண்மையை நாங்கள் உறுதி செய்வோம்” இவ்வாறு கூறினார்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »