Press "Enter" to skip to content

சாலையில் சுருண்டு மடியும் மக்கள்.. உதவினால் நோய் பரவும்.. சீனாவில் கொடூரம்.. அதிர்ச்சி தரும் காணொளி

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் மக்கள் சாலையில் சுருண்டு மடியும் சம்பவங்கள் நடந்து வருகிறது.இது தொடர்பாக அதிர்ச்சி தரும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு இதுவரை 131 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி இருக்கிறார்கள். அதேபோல் இதுவரை 5300 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் வைரஸ் சீனாவின் வுஹன் நகரத்தில் தோன்றிய கொடுமையான வைரஸ் ஆகும்.இது தொடுதல் மூலமாக ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவ கூடியது.

imageஎல்லாரும் சொல்லுங்க.. “ஓம் தரே ட்டுரு சோஹா”.. கொரோனா வைரஸ் அப்படியே ஓடீரும் பாருங்க.. சொல்றாரு லாமா!

மிக மோசம்

இந்த நோய் தாக்குதல் காரணமாக சீனாவில் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கை பேரழிவு நடக்கும் போது என்ன நடக்குமோ அதேபோல்தான் தற்போதும் சீனாவில் நடந்து வருகிறது. நோய் பாதிக்கப்பட்ட வுஹன் நகரம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் கூட வெளியே செல்லவில்லை. அங்கு இதனால் பலர் தண்ணீர், உணவு இன்றி கடும் கஷ்டத்தில் இருக்கிறார்கள்.

மாஸ்க்

அங்கு எல்லோரும் முகத்தில் மாஸ்க் அணிந்து சுற்றி வருகிறார்கள். இதனால் அங்கு மாஸ்க் விலை மொத்தமாக அதிகரித்துள்ளது. மாஸ்க் விலையை ஒரே அடியாக உயர்த்திய நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காய்ச்சலை தடுக்கும் மருந்துகளும் மொத்தமாக விலை உயர்ந்துள்ளது. இதனால் அங்கு சாதாரண நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் மக்கள் சிகிச்சை பெற முடியாமல் தவிர்த்து வருகிறார்கள்.

வேகம்

இன்னொரு பக்கம் அங்கு நோய் தாக்கும் மக்கள் சாலையில் நடந்து கொண்டு இருக்கும் போதே சுருண்டு விழுகிறார்கள். நேற்று மட்டும் 10 பேர் பொது இடங்களில் சுருண்டு விழுந்து பலியாகி இருக்கிறார்கள். சாலையிலும், மெட்ரோவில் சுருண்டு விழுந்து இவர்கள் உயிரை விட்டுள்ளனர். முக்கியமாக மெட்ரோக்களில் இந்த சம்பவம் அதிகம் நடந்துள்ளது. இந்த கொடூரமான் விஷயம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது.

ஷாக்கிங்

இந்த வீடியோவில் சுருண்டு விழும் மக்களை யாரும் தூக்காமல், உதவி செய்யாமல் இருக்கிறார்கள். இந்த வைரஸ் தொடுவதன் மூலம் பரவ கூடியது. இதனால் கீழே விழும் மக்களுக்கு யாரும் உதவி செய்வதில்லை. பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் வந்து தூக்கும் வரை, கீழே விழும் மக்களை யாரும் தூங்குவதில்லை. இந்த வீடியோக்கள் பார்க்கவே அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »