Press "Enter" to skip to content

புதிய திருப்பம்.. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)க்கு எதிரான போராட்டத்தில் சாதித்த ஆஸ்திரேலியா.. .விரைவில் தடுப்பூசி!

மெல்போர்ன்: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை மீண்டும் உருவாக்கி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

கொரோனா வைரஸக்கு எதிரான போராட்டத்தில் திருப்பு முனையாக பார்க்கப்படும் இந்த கண்டுபிடிப்பின் காரணமாக ஒருவருக்கு அறிகுறிகள் தெரியும் முன்னே தொற்று இருக்கிறதா என்பதை இனி சோதனை செய்துபார்த்துவிட முடியும். அதேபோல் இந்த வைரஸை கொல்ல மருந்து கண்டுபிடிப்பதும் விரைவில் இனி சாத்தியமாகும்.

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,974 ஆக உயர்ந்துள்ளது. 132 பேர் இறந்து போனதாக சீனாவின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அங்கு ஒரே நாளில் 1500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

image கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய.. சென்னை விமான நிலையத்தில்.. போதிய வசதிகள் இல்லை!

உயிரிழப்பு இல்லை

சீனா தவிர தாய்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 15 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குல் ஏற்பட்டுள்ளது. ஆனால் உலகில் சீனாவைத் தவிர வேறு எங்கும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. உலகின் பல நாடுகளும் கொரோனா வைரஸில் இருந்து தங்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

உயிர்கொல்லி வைரஸ்

எனினும் ‘ உயிர் கொல்லி வைரஸ் கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. கண்டுபிடிக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக இறங்கி உள்ளது. அண்மையில் சீனா கொரோனா வைரஸின் மைக்ரோஸ்கோபிக் படத்தை முதன்முதலாக வெளியிட்டது. வுகான் நகரில் இரண்டு நோயாளிகளிடம் இருந்து இந்த வைரஸ் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.

புதிய வைரஸ்

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள விஞ்ஞானிகள், புதிய கொரோனா வைரஸை மீண்டும் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். சீன விஞ்ஞானிகள் ஏற்கெனவே கண்டுபிடித்து வெளியிட்டிருந்தாலும் அதன் மரபணு வரிசையை மட்டும்தான் சீனா (genome sequence) வெளியிட்டது..

மறு உருவாக்கம்

ஆனால் மெல்பர்னில் இருக்கும் சிறப்பு ஆய்வுக் கூட விஞ்ஞானிகள் (The Peter Doherty Institute for Infection and Immunity) பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து பெற்று மறுஉருவாக்கம் செய்ததாக கூறியுள்ளனர். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான திருப்பு முனை என மருத்துவர்கள் தெரிவித்தன.

விரைவாக கண்டுபிடிப்பு

இந்தக் கண்டுபிடிப்பு காரணமாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளதா என்பதை விரைவாக கண்டறிவதுடன், அதற்குச் சிகிச்சை அளிப்பது எளிமையாகும் என்கிறார்கள். அதாவது அறிகுறிகள் தெரியும் முன்னே இதை வைத்து தொற்று இருக்கிறதா என்பதைச் சோதனை செய்துபார்க்க முடியும் என்கிறார்கள். இந்த கண்டுபிடிப்பின் காரணமாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான பணியில் நெருங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »