Press "Enter" to skip to content

கொரோனாவுடன் விபச்சாரம், சீனா செய்த பயங்கரம், உலகநாடுகளை கதிகலங்க வைத்த அதிபர்…!!

கொரோனா வைரஸை சீனா பரப்புவதை போல விபச்சாரத்தையும் பரப்புவதாக பிலிப்பைன்ஸ் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளது . கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிலிப்பைன்ஸின் இந்த குற்றச்சாட்டு சீனாவை மேலும்  அதிர்ச்சியடைய வைத்துள்ளது .  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின்  வூஹான் நகரத்தில் கொரோனா என்ற கொடிய வைரஸ் தாக்கம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது .பின்னர் அந்த வைரஸ் ஒவ்வொரு  நகரமாக பரவி சீனாவில் மிகப்பெரும் கொள்ளை நோயாக மாறியுள்ளது .  இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் .

106 பேர் இந்த வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர் ,  இந்நிலையில் எல்லா நாடுகளும் அந்தந்த நாட்டின் விமான நிலையங்களில் சீனர்களை கண்காணிக்க மருத்துவக் குழுக்களை அமைத்துள்ளனர் .  குறிப்பாக சீன நாட்டினர் தங்களது நாட்டிற்கு வர தடை விதித்து விசா வழங்குவதையும் நிறுத்தியுள்ளது.  எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனா இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது .  எதையுமே சவாலாக எடுத்து சாதிக்கக்கூடிய  சீன அதிபர்  இந்த வைரஸை தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என கை விடுத்துள்ளார்.  அவரின் நம்பிக்கை இழந்த பேச்சு  சர்வதேச அளவில் சீனாவை பரிதாபமாகபார்க்கவைத்துள்ளது .  

இந்நிலையில் இலங்கை,  ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் சீனர்கள்  தங்களது நாட்டிற்கு வர  தடை விதித்துள்ளது.  இந்நிலையில் பிலிப்பைன்ஸ் சீனாவுக்கு எதிராக பகிரங்கமான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளது ,   அதாவது பிலிப்பைன்ஸ் நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் சீன பெண்களை வைத்து சீனர்கள் நடத்தும் உல்லாச விடுதிகள் பெருகி விட்டது எனவும் அதனால் தங்களது நாட்டில் விபச்சாரம் மலிந்து விட்டது எனவும் அந்நாட்டு அதிபர் ஆதங்கம் தெரிவித்துள்ளார் . அதுமட்டுமல்லாமல்  கொரோனா வைரஸை சீனா எல்லா நாடுகளுக்கும்  பரப்புவதை போல ,  விபச்சாரத்தையும் பரப்புகிறது என அவர் சீனாவை கடுமையாக தாக்கியுள்ளார் ஏற்கனவே வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சீனா பிலிப்பைன்ஸின் குற்றச்சாட்டால் மிகுந்த காயம் அடைந்து உள்ளது குறிப்பிடதக்கது.  
 

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »