Press "Enter" to skip to content

அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..! 5 , 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு “கட்டாயம் பொதுத்தேர்வு”..!

அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி..! 5 , 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு “கட்டாயம் பொதுத்தேர்வு”..! 

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்று வருகிறார்.

இந்த நிலையில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது எதிர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

மேலும் இந்த சிறுவயதிலேயே பொதுத்தேர்வை மாணவர்கள் எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும். மேலும் அது பெரிய மன அழுத்தத்தை குழந்தைகளுக்கு கொடுப்பது மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கும் மாபெரும் மன அழுத்தமாக மாறும் என பல்வேறு கருத்துக்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தது.

இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தெரிவிக்கும் போது மாணவர்களின் திறனை மேம்படுத்துவதுவதற்காக தான் பொதுத்தேர்வு வைக்கப்படுகிறது என்றும், எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை ஒரு முறை நடைமுறைபடுத்தி பார்த்தல் தான் முழுமையான ஒரு ரிசல்ட் நமக்கு தெரியும் என அமைச்சர் செங்கட்டையன் தெரிவித்து உள்ளார். 

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »