Press "Enter" to skip to content

கருப்பு ஆடுகளை களையெடுப்போம்.. ஆனால் குரூப் 4 தேர்வை ரத்து செய்ய முடியாது.. ஜெயக்குமார் திட்டவட்டம்

சென்னை: டிஎன்பிஎஸ் குரூப் 4 தேர்வை ரத்து செய்ய முடியாது என்றும் முறைகேட்டில் ஈடுபட்ட ஒரு சிலருக்காக தேர்வர்கள் அனைவரையும் தண்டிக்க முடியாது என்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயக்கமார் தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு செய்ததாக 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக பள்ளிக்கல்வித் துறை அலுவலக உதவியாளர் ரமேஷ்(39), எரிசக்தித் துறை அலுவலக உதவியாளர் திருக்குமரன்(35), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) ரெக்கார்டு கிளார்க் ஓம்காந்தன், இரண்டு இடைத்தரகர்கள் உள்பட 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

imageமனைவி 5வது இடம், தம்பி 3வது இடம், தம்பி மனைவி 6வது! டிஎன்பிஎஸ்சி மோசடி.. அதிர வைத்த சென்னை எஸ்ஐ

குரூப் 4 -9 லட்சம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், சுமார் 9 லட்சம் ரூபாய் கொடுத்து தேர்ச்சி பெற்றதாகவும் குரூப் 2 தேர்வில் சுமார் 13 லட்சம் ரூபாய் கொடுத்து வெற்றி பெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எப்படி பணம் பரிமாறப்பட்டது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார். யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்பதை விசாரித்து வருகிறார்கள்.

டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள்

இந்த மோசடி தொடர்பாக கடந்த ஆறு நாட்களாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த முறைகேட்டில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள்.

அரசு களையெடுக்கும்

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் சிறுபுள்ளியாக இருந்தாலும் சரி, பெரும் புள்ளியாக இருந்தாலும் சரி, கரும்புள்ளியாக இருந்தாலும் சரி, எந்த புள்ளியாக இருந்தாலும் சரி , அரசு நிச்சயம் களையெடுக்கும் என்று உறுதி தெரிவித்தார்.

தண்டிக்க முடியாது

ஒரு சில மையங்களில் நடந்த முறைகேட்டிற்காக ஒட்டுமொத்த டிஎன்பிஎஸ்சி மீதும் குற்றம் சொல்ல முடியாது என்று தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், எந்த ஓட்டையும் இல்லாமல் வருங்காலங்களில் தேர்வு நடத்தப்படும் என்றார். தேர்வு எழுதிய அனைவரது விடைத்தாள்களும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறிய ஜெயக்குமார், தவறு செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதேநேரம் ஒரு சிலர் முறைகேடு செய்ததற்காக ஒட்டுமொத்த தேர்வை ரத்து செய்து தேர்வர்கள் அனைவரையும் தண்டிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

கோச்சிங் சென்டர்

கருப்பு ஆடுகளை அரசு களையெடுத்த வருவதாக கூறிய அமைச்சர் ஜெயக்குமார். . இளைஞர்களும், தேர்வர்களும் எதிர்காலம் கொண்டு பயப்பட வேண்டாம் என்று நம்பிகை தெரிவித்தார். கோச்சிங் சென்டர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்த அமைச்சர், ஒரிசாவில் உள்ளது போல் கோச்சிங் சென்டர் மற்றும் முறைகேட்டை தடுக்க சட்டம் இயற்ற அரசு ஆலோசித்து வருவதாக கூறினார்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »