Press "Enter" to skip to content

டிஸ்கவரி சேனலில் ரஜினி என்ன பேசினார்?.. எதை வலியுறுத்தினார்?.. அதிகாரப்பூர்வ தகவல் இதோ..

டெல்லி: நீர் பாதுகாப்பு குறித்து டிஸ்கவரி சேனலில் ரஜினிகாந்த் பேசியதாக அந்த சேனல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.

மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பியர் கிரில்ஸ் டிஸ்கவரி சேனலில் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.

இந்த நிகழ்ச்சியில் இதற்கு முன்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நரேந்திர மோடி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி 3.6 மில்லியன் பார்வையாளர்களை நிகழ்ச்சியை கண்டு களித்ததால் சேனல் புதிய வரலாறு படைத்தது.

imageரஜினிக்கு எதிரான வருமான வரி வழக்கு ஏன் வாபஸ் பெறப்பட்டது தெரியுமா.. சீமான் கொடுத்த கலக்கல் விளக்கம்

ரஜினிகாந்த்

இதற்காக கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதிக்கு பியர் கிரில்ஸும் ரஜினிகாந்தும் சென்றிருந்தனர். நேற்று ஒரு நாள் மட்டும் இந்த படப்பிடிப்பு நடந்தது. இதில் கலந்து கொண்ட ரஜினிகாந்திற்கு காயம் ஏற்பட்டதாகவும் அதனால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. எனினும் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார்.

படப்பிடிப்பு

அப்போது அவர் கூறுகையில் பந்திப்பூர் வனப்பகுதியில் டிஸ்கவரி சேனலுக்கான படப்பிடிப்பு நல்லபடியாக நடந்து முடிந்தது. எனக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. காலில் சிறிய முள் ஒன்று குத்தியது. மற்றபடி வேறு ஒன்றுமில்லை என்றார். இதுகுறித்து பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நாங்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.

சேனலுக்கு நன்றி

அதைத் தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ளேன். அவர் டிஸ்கவரி டிவி சேனல் விவாதத்தில் கலந்து கொண்டார் என கூறிய கிரில்ஸ் ரஜினியுடன் உள்ள புகைப்படத்தை இணைத்துள்ளார். மேலும் #ThalaivaOnDiscovery என ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளார். இதையடுத்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பியர் கிரில்ஸுக்கும் டிஸ்கவரி சேனலுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

நீர் பாதுகாப்பு

இந்த நிலையில் டிஸ்கவரி சேனல் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளது. அந்த ட்வீட்டில் பிரபலமான இந்தியர்களை கொண்டு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் பங்கேற்றதில் நாங்கள் மகிழ்கிறோம். அவர் டிஸ்கவரி சேனல் விவாதத்தில் கலந்து கொண்டார். பியர் கிரில்ஸுடன் வனப்பகுதிக்கு சென்றார். அவர் நீர் பாதுகாப்பு குறித்து அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். நதிகள் இணைப்பு, நீர் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »