Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ விமான விபத்தில் 2 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 வீரர்கள் பலியானதாகவும், அவர்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

காபூல்:

ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் டே யாக் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. முதலில் இது பயணிகள் விமானம் என்று கூறப்பட்டது.

ஆனால் பின்னர் விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அமெரிக்க ராணுவமும் இதனை உறுதி செய்தது. அதே சமயம் விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள், அவர்களின் கதி என்ன என்பது குறித்து அமெரிக்கா எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 வீரர்கள் பலியானதாகவும், அவர்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அதே சமயம் எதிரிகளால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »