Press "Enter" to skip to content

குறைகளை கேட்க வீடுவீடாக வந்து மக்களை சந்திக்கபோகிறார் முதல்வர்…!! அல்லுவிடும் அதிகாரிகள்…!!

எந்த முதலமைச்சரும் யோசித்துக் கூட பார்க்காத அளவுக்கு அதிரடியாக பல மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்து இந்தியாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தன் தந்தை  ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் அரசியல் பாதையை பின்பற்றி அரசியலில் குதித்தவர் ஆவார் தந்தையின் மறைவுக்குப் பின்னர் தன் தந்தையின் பெயரிலேயே கட்சி துவங்கி ஆந்திர மக்களின் ஆதரவைப் பெற்று முதலமைச்சராகியுள்ளார் ஜெகன் ஆட்சி பொறுப்பேற்றவுடன் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத  வகையிலான பல மக்கள் நலத் திட்டங்களை அதிரடியாக அறிவித்து மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற முதல்வராக திகழ்கிறார் .

  

முதியோர்களுக்கான ஓய்வுதியம் பன்மடங்கு  உயர்த்தி அறிவிப்பு ,  சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் பெண்களுக்கு எதிராக குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை ,  அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வகையில் 5 துணை  முதலமைச்சர்கள் மூன்று ஆந்திர மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் என அடுத்தடுத்து அதிரடி திட்டங்கள் அறிவித்து மற்ற மாநில மக்களையும் ,  இதுபோல் தங்களுக்கு ஒரு முதலமைச்சர் கிடைக்கவில்லையே என்று ஏக்கப் பெருமூச்சு விடும் அளவிற்கு பேச வைத்தவர் முலமைச்சர் ஜெகன் .  ஆட்சிக்கு வந்த 7 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அவர் கொண்டு வந்த திட்டங்கள் நிறைவாக  மக்களைப் போய்ச் சேர்ந்து விட்டதால்  மீண்டும் தனது பழைய பாணியில் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்  ஜெகன் .  இதற்காக பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பல்லிபாட்டா என்ற கிராம  சுற்றுப் பயணத்தைதொடங்க உள்ளார் .

 

அவரது தந்தை ஒய்எஸ்ஆர் முதல்வராக இருந்தபோது  ராட்சபண்டா என்ற திட்டத்தின் மாதிரியாக இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் ஆவர்.  மக்களை நேரடியாக தொடர்பு கொள்ள உள்ள ஜெகன்மோகன் ரெட்டி , தான் அறிவித்த திட்டங்கள் முறையாக வந்து சேர்ந்து விட்டதா என மக்களை நேரில் சந்தித்து  விசாரிக்க உள்ளார் . முதற்கட்டமாக 29 கிராமங்களுக்கு மட்டும் இச்சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் .  அதேபோல் அமராவதியில் தலைநகரம் அமைக்கா அரசின் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடி வரும் நிலையில் , அவர் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளது ஆந்திரத்தில்  அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது .

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »