Press "Enter" to skip to content

டெல்லியில் நடந்த குடியரசு தின சிறப்பு முகாமில் பள்ளி மாணவிக்கு விருது – பிரதமர் மோடி வழங்கினார்

சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி மாணவி ஷ்ரேயா ஷஜுவ்க்கு பிரதமர் நரேந்திர மோடி, விருது வழங்கிய போது எடுத்த படம்.

டெல்லியில் நடந்த குடியரசு தின சிறப்பு முகாமில் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி மாணவிக்கு பிரதமர் நரேந்திரமோடி விருது வழங்கினார்.

கோவை:

குடியரசு தின சிறப்பு முகாம் (ஆர்.டி.சி.) டெல்லியில் நடந்தது. இந்த முகாமில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபார் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீசரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஷ்ரேயா ஷஜுவ் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அனைத்து இந்திய அளவில் சிறந்த வீராங்கனை என்ற விருது பெற்றார். இதையடுத்து அவருக்கு இந்த விருதை நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார்.

மேலும் இதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஸ்ரீநிஷாந்த் தமிழ்நாட்டின் சார்பில் ஜூனியர் டிவிஷன் கேடட் பிரிவில் பிரதமர் பேரணியில் கலந்துகொண்டார். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் தமிழக அளவில் நடந்த 9 முகாம்களில் கலந்துகொண்டு பல்வேறு வெற்றி பெற்றதன் மூலம் இவர்கள் இருவரும் டெல்லியில் நடந்த சிறப்பு முகாமில் பங்கேற்க தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவர்களை பள்ளியின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன், அறங்காவலர் எஸ்.மோகன்தாஸ் மற்றும் முதல்வர்கள், ஆசிரியர்கள், தேசிய மாணவர் படை ஆசிரியர்கள் அனைவரும் பராட்டினர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »