Press "Enter" to skip to content

அன்புள்ள திருடா.. அதை மட்டும் குடுத்துடு சாமி.. திருடனுக்கு பள்ளி ஆசிரியர்கள் உருக்கமான கடிதம்

கண்ணூர்: கேரளாவில் அரசு பள்ளியில் பொருட்களை எல்லாம் திருடிசென்ற திருடனுக்கு அங்குள்ள ஆசிரியர்கள் உருக்கமான கடிதம் எழுதியுள்ளனர். அந்தகடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கேரளாவின் தலசேரியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். 40க்கும்மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் உள்ளார்கள்.

இந்த பள்ளியில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருடன் ஒருவன் தலைமை ஆசிரியரின் அறையில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணம், 30 ஆயிரம் மதிப்புள்ள கேமரா உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றான்.

imageஎடப்பாடியார் நினைத்தால் ராக்கெட் எடுத்துக்கிட்டு நிலவில் ஆம்ஸ்ட்ராங் போல் இறங்குவார்.. அமைச்சர் பலே!

பென்டிரைவ்கள்

இந்நிலையில் மீண்டும் அதே பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருட்டு சம்பவம் அரங்கேறியது. பள்ளிக்குள் புகுந்த திருடன் 3 மடிக்கணிணிகள்(லேப்டாப்), கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் மற்றும் சில பென்டிரைவ்களையும் திருடிக்கொண்டு தப்பிவிட்டான்.

சமூக வலைதளத்தில்

இதனிடையே பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து திருடனுக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அன்புள்ள திருடனுக்கு, நீ மீண்டும் வந்து எங்கள் பள்ளியில் திருடியது மோசமான செயல். எங்கள் அனுமானம் சரியாக இருந்தால், நீ தான் கடந்த 7 மாதம் முன்பு வந்து திருடியிருக்க வேண்டும்.

சம்பளம் கிடைக்கும்

அப்போது ரூ.40000 பணம் மற்றும் மாணவர்களுக்காக வாங்கி வைத்திருந்த கேமராவை திருடி சென்றுவிட்டாய். போலீசில் புகார் கொடுத்தும் உன்னை அவர்களால் கைது செய்ய முடியவில்லை. ஆனால் இந்த முறை நீ பள்ளிக்குள் புகுந்து முக்கிய பொருட்களை திருடி சென்றுவிட்டாய். கண்காணிப்பு கேமராவில் உன்னுடைய காட்சிகள் பதிவாகி இருக்கும் என்பதால் அதன் ஹார்டு டிஸ்க்கை அபேஸ் செய்தாய்.

சம்பளம் வராது

ஆனால் நீ திருடி சென்ற பொருட்களில் உனக்கு பயன்படாத எங்கள் டிஜிட்டல் சிக்னேச்சர்கள் அடங்கிய பென்டிரைவ்களையும் திருடி சென்றுவிட்டாய். அந்த சிக்னேச்சர்கள் இருந்தால் தான் எங்களுக்கு சம்பளம் கிடைக்கும்.நீ அதை திருடி சென்றுவிட்டதால் இந்த மாதம் எங்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. இதனால் எங்கள் வீட்டில் வயதானவர்களுக்கு மருந்து கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பி கொடுத்திடு

பலர் வங்கியில் கடன் வாங்கி உள்ளோம். இதனால் அவர்களுக்கு இரு மடங்கு வட்டி கட்ட வேண்டிய நிலை ஏற்படும். உன்னால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எங்கள் சிரமத்தை உணர்ந்து அந்த பென்டிரைவை மட்டும் திருப்பி தந்துவிடு. உனது வேலை திருடுவதாக இருந்தால், நீ பள்ளியில் திருடுவதை விட்டு விட்டு வேறு நல்ல வேலை செய்ய கற்றுக்கொள் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதம் வைரலாக பரவி வருகிறது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »