Press "Enter" to skip to content

சார்ஸை விட மோசமானது.. பிளேக் அளவிற்கு அபாயமானது.. பலம் பெற்ற கொரோனா.. எப்படி தெரியுமா?

பெய்ஜிங்: சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சார்ஸை விட கொடூரமானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வைரஸ் பிளேக் அளவிற்கு அபாயமானதாக இருக்கலாம் என்று இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தாக்குதல் எல்லோரும் நினைத்தை விட வேகமாக பரவி வருகிறது. தொடக்கத்தில், முதல் ஒருவாரம் மட்டும் கொரோனா வைரஸ் மிக மெதுவாக பரவியது. ஆகவே இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.

மக்கள் யாரும் இதனால் பெரிய அளவில் இறக்க மாட்டார்கள் என்று சீன அரசு கருதியது. இதனால் சீன அரசு இதில் மெத்தனமாக இருந்தது. ஆனால் போக போக கொரோனா வைரஸ் வேகம் எடுக்க தொடங்கியது.

imageஓவர் டைம் பார்த்து லோட் அனுப்புறோம்.. முகமூடி இல்லாமல் கஷ்டப்படும் சீனா.. உதவிக்கு களமிறங்கிய மதுரை

இரண்டு நாட்கள்

இந்த நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களில் கொரோனா வைரஸ் யாரும் எதிர்பார்க்காத வேகத்தை எடுத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் கொரோனா வைரஸ் காரணமாக 5700 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆம், இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் காரணமாக 2200 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது இதன் மொத்த எண்ணிக்கை 7900ஐ தொட்டு இருக்கிறது. அவ்வளவு வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

பலி எண்ணிக்கை

அதேபோல் கடந்த இரண்டு நாட்களில் பலி எண்ணிக்கை மட்டும் 80ஐ தொட்டுள்ளது. நேற்று 45 பேரும், அதற்கு முதல்நாள் 45 பேரும் பலியாகி உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் 90 பேர் பலியாகி இருந்த நிலையில், தற்போது 170 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் இந்த வைரஸ் தாக்குதல் இருப்பதாக அஞ்சப்படும் மக்களின் எண்ணிக்கை 12,176ஐ தொட்டுள்ளது. இதனால்தான் இந்த வைரஸின் வேகம் மக்களை நடுநடுங்க வைத்துள்ளது.

சார்ஸ்

இன்னொரு பக்கம் இந்த கொரோனா வைரஸ் சார்ஸை விட கொடூரமான வைரஸ் என்பதும் நிரூபணம் ஆகி உள்ளது. அதன்படி சார்ஸ் நோய் 167 பேரில் இருந்து 5050 பேருக்கு பரவ மொத்தம் 37 நாட்கள் ஆனது. ஆம் முதலில் மெதுவாக பரவிய சார்ஸ் நோய் பின் வேகம் எடுத்தது. அதன்பின் தீவிரம் அடைந்தது. ஆனால் கொரோனா வைரஸ் சார்சை விட மோசமானது ஆகும். இது முதலில் 90 பேருக்கு பரவ தாமதம் ஆனது. ஆனால் 90 பேரில் இருந்து 5974 பேருக்கு வெறும் 11 நாட்களில் இந்த கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

மிகவும் ஆபத்து

இது இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் கொரோனா வைரஸ் ஏன் மிகவும் கொடூரமானது, ஏன் ஆபத்தானது என்பது புரியும். ஆம், சார்ஸை விட மிக மோசமான வைரஸ் ஒன்றை உலகம் தற்போது எதிர்கொண்டு வருகிறது. அதே போல் இந்த கொரோனா வைரஸ், பிளேக்கிற்கு இணையானது என்றும் கூறப்படுகிறது. பிளேக் தாக்குதல் மூலம் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 20 கோடி பேர் பலியானார்கள். இந்த பிளேக் மொத்தமாக 20 கோடி பேரை பலிவாங்க மொத்தம் 8 வருடங்கள் ஆனது.

எத்தனை பேர்

அதேபோல் இந்த கொரோனா வைரஸும் அதிக பேரை பலி வாங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இது இன்னொரு பிளேக் போல உருவெடுக்கும். பிளேக் அளவிற்கு உயிர்களை வாங்கவில்லை என்றாலும் அதற்கு இணையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். கொரோனா வைரஸுக்கு இன்னும் முழுமையான மருந்து எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது எங்கு உருவானது என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதுதான் இந்த வைரஸ் வேகமாக பரவ காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்படி உருவானது

ஆம் வைரஸ் எங்கு உருவானது என்பதை கண்டுபிடித்தால்தான் இந்த வைரஸை அழிக்க முடியும். இதை கண்டுபிடிப்பதற்காக சீன ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். வைரஸ் எங்கு , எப்படி உருவானது என்பதை கண்டுபிடிப்பது மூலம்தான் அதற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முடியும். ஆனால் சீனா அதற்கு இன்னும் ஒரு படி கூட நெருக்கமாகவில்லை. இதற்கு தீர்வு காணும் வரை வைரஸ் வேகமாக பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »