Press "Enter" to skip to content

யார் இவர்… முகமூடியுடன் வந்தார்.. வைத்தார்.. சென்றார்.. காவல் துறை சல்யூட் .. மக்கள் விரும்பத்தக்கது காணொளி!

பெய்ஜிங்: இவர் யாரென்று தெரியவில்லை.. வேகவேகமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு அட்டை பெட்டியை கொண்டு வந்தார்.. அதை அங்கேயே போட்டுவிட்டு, திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டார்.. ஆனால், இவருக்குதான் சீன போலீஸார் ஒரு பெரிய சல்யூட் அடித்து வருகின்றனர்!

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுஹான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ், உலகை மிரட்டி வருகிறது.. உலகின் எங்கோ ஒரு மூலையில் ஆரம்பித்த இந்த நோய், நம்ம ஊர் ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகளை திறக்கும் அளவுக்கு பீதியை கிளப்பி விட்டுள்ளது.

இந்த நிமிடம் வரை சீன மக்கள் கொரோனாவில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.. 132 பேர் சீனாவில் உயிரிழந்துள்ளனர். மேலும், 6061 பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதனால் சீன மக்கள் பலரும் இந்த வைரஸ் பரவுவதை தடுக்க தங்கள் முகங்களில் மாஸ்க்குகளை அணிந்து கொண்டுதான் வெளியே நடமாட முடிகிறது.. ஏற்கனவே அங்கு மக்கள்தொகை அதிகம்.. அதனால் இந்த முகமூடிகளுக்கு பெரும் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது.

imageஇந்த 4 உணவுகளை சாப்பிடுங்கள்.. கொரோனா வைரஸிலிருந்து தப்பலாம்.. டிக்டாக்கில் மருத்துவர் அஸ்வின் விஜய்

இந்நிலையில், சீனாவில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு நபர் வந்தார்.. அவர் முகமூடி அணிந்திருந்தார்.. கையில் ஒரு பெரிய அட்டைபெட்டி வைத்திருந்தார்.. போலீசார் அவரை தூரத்தில் பார்த்ததுமே அலர்ட் ஆனார்கள்.. ஆனால் அந்த நபர் கொண்டு வந்த அட்டை பெட்டியை ஸ்டேஷன் வாசலில் வைத்துவிட்டு கடகடவென சென்றுவிட்டார்.

இதனால் போலீசார் மேலும் பதட்டமானார்கள்.. யார் அவர்? முகமூடி அணிந்து ஏன் வந்தார்? அது என்ன அட்டைப்பெட்டி? அதற்குள் என்ன மர்மபொருள்? என்று ஓடிப்போய் அந்த பெட்டியை திறந்து பார்த்தனர். அதில் 500 முகமூடிகள் இருந்தன.. இந்த மாஸ்க்குகளை அன்பளிப்பாக தந்துவிட்டு போயுள்ளார் என்பது பிறகுதான் தெரிந்தது.. ஆனால் இதை யாருக்காக தந்தார், போலீசுக்கா, அல்லது பொதுமக்களுக்கா என்று தெரியவில்லை.

எனினும், அந்த மாஸ்க்குகளை போலீசார் அந்த பகுதி மக்களுக்கு விநியோகித்தனர்… ஆனால் இவ்வளவு பெரிய உதவியை செய்துவிட்டு போன நபர் யார் என்றே தெரியாமல் போலீசார் தவித்தனர்.. அவருக்கு ஒரு நன்றியைகூட சொல்ல முடியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டனர்.. ஆனால் முகமூடிகளை வைத்துவிட்டு போன பிறகு, போலீசார் அந்த மர்மநபருக்கு ஒரு மரியாதைக்குரிய சல்யூட்டை அடித்தனர்! இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »