Press "Enter" to skip to content

கேரளாவை அடுத்து பெங்களூரில் “கரோனோ-19 பேர்”..! வேகமாக பரவுவதால் திக் திக்..!

கேரளாவை அடுத்து  பெங்களூரில் “கரோனோ-19 பேர்”..! வேகமாக பரவுவதால் திக் திக்..! 

உலகம் முழுவதும் பல நாடுகளில் கரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் தற்போது ஒரு நபருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

அந்த வகையில் சீனாவில் ஹுவாங்  பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த கேரளாவை சேர்ந்த மாணவர் தற்போது கேரள வந்துள்ளார். அவரை கண்காணித்து சோதனை செய்தபோது கரோனோ வைரஸ் தாக்குதல் ஏற்பட்டிருப்பது தெரிய வந்து உள்ளது. இதனை தொடர்ந்து கேரளாவில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஒரு நிலையில் தற்போது பெங்களூருவில் 19 பேருக்கு வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 8 பேர் மட்டும் வில்சன் கார்டன் பகுதியில் உள்ள ஓர் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது இருக்கும் நிலவரப்படி உலக நாடுகள் முழுவதுமே கரோனோ வைரஸ் குறித்த பீதியில் இருக்கின்றனர். அந்த வகையில் எப்படி தாக்குகிறது? எப்படி பரவுகிறது? அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்பது குறித்தும், தடுக்க என்ன வழி முறைகள் உள்ளது? நாம் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன என்பது குறித்தும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது பல்வேறு நாடுகள்.

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு புறம் இதற்கான தடுப்பூசி தயார் செய்வதிலும் இறங்கியுள்ளது அமெரிக்க தேசிய மருத்துவ ஆய்வகம். மேலும் பிரபல ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் தடுப்பூசி தயார் செய்வதில் இறங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவும் இதற்கான மாதிரி வைரஸை ஏற்படுத்தி இந்த நோயை தடுக்க முடியுமா என்ற ஆராய்ச்சியில் இறங்கி உள்ளது என்பது குறிப்பிட தக்கது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் N95 மாஸ்க் விற்பனை அதிகரித்து வருகிறது. தற்போது இந்த மாஸ் கிடைக்கப்பெறாமல் மக்களும் அவதிப்படுகின்றனர். மேலும் இரவு பகலாக இந்த மாஸ்க் தயாரிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »