Press "Enter" to skip to content

கொரோனா வைரசை கூட சமாளிச்சிரலாம்.. சீனா பண்ற வேலைதான்.. முடியல.. பல்லை கடிக்கும் உலக நாடுகள்!

பீஜிங்: இந்தியா மட்டுமல்ல, உலகின் பல நாடுகளும் சீனா மீது கடும் கோபத்தில் உள்ளன. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தவறியதால் மட்டுமல்ல, தங்கள் நாட்டு குடிமக்களை அழைத்துச் செல்லவும் சீனா அனுமதிக்காததுதான் இதற்கு காரணம்.

கொரோனா வைரஸ் பாதிப்புதொடங்கியது, மத்திய சீன நகரமான வுஹானில்தான். அங்கே இன்னும் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற்ற பல நாடுகளும் சீனாவுடன் போராடி வருகின்றன.

சீனாவில், கொரோனா பாதித்தோரின், இறப்பு எண்ணிக்கை வியாழக்கிழமை நிலவரப்படி, 170 ஆக உயர்ந்தது. முந்தைய நாள், இது, 132 ஆக இருந்தது. இது 29% உயர்வாகும். சீனாவில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை இப்போது 7,711 ஆக உள்ளது. ஒரு நாள் முன்பு 5,974 ஆக இருந்தது.

imageசீன ஹோட்டலில் சாப்பிட்டார்.. கேரளா வந்தார்.. இப்பொது வைரஸ்.. இந்தியாவிற்கு கொரோனா வந்தது எப்படி?

காட்டுத் தீ போல

அந்த அளவுக்கு மளமளவென, காட்டுத் தீ போல, கொரோனா பாதிப்பு பரவி வருகிறது. கொரோனா வைரஸ் இறப்புகளில் 162 பேர் – அதாவது, 95% – வுஹான் அமைந்துள்ள ஹூபே மாகாணத்தில் வசித்தவர்கள். சமீபத்திய நோயாளி இறப்புகளில், 37 பேர் ஹூபே மாகாணத்திலும், தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் ஒருவரும் உண்டு. ஆரம்பத்தில் வைரஸின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்டது உலக சுகாதார அமைப்பு (WHO). இதன்பிறகுதான், நிலைமை அதற்கு புரிந்தது. அனைத்து நாட்டு அரசுகளும் “எச்சரிக்கையாக” இருக்குமாறு இப்போது, அது எச்சரித்துள்ளது, மேலும் அதன் அவசரக் குழு, இன்று கூடி உலக சுகாதார அவசரநிலையை அறிவிக்க வேண்டுமா என்று முடிவு செய்ய உள்ளது.

உலக சுகாதார நிறுவனம்

WHOஇன் அவசரகால நிலைகளுக்கான, தலைவர் டாக்டர் மைக்கேல் ரியான், சீனாவிற்கு வெளியே – ஜப்பான், ஜெர்மனி, கனடா மற்றும் வியட்நாமில் மனிதனுக்கு மனிதனுக்கு வைரஸ் பரவுவதற்கான சில கேஸ்கள் பதிவாகியுள்ளது “மிகுந்த முக்கியத்துவமும், கவலையும் கொண்டவை” என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் ஜப்பானும் தங்கள் குடிமக்களை சீனாவிலிருந்து வெளியேற்றத் தொடங்கியுள்ளன. மற்ற நாடுகளும் வுஹானுக்கு விமானங்களை அனுப்ப தயாராக உள்ளன. இந்தியாவும் இதில் முக்கியமான ஒரு நாடு. ஆனால் சீன அதிகாரிகளிடமிருந்து இதற்கு அனுமதி பெறுவதில் தாமதம் நிலவுகிறது. இந்தியர்கள் பலரும் தங்களை காப்பாற்றி தாயகம் அழைத்துச் செல்ல வலியுறுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். சீனா முட்டுக்கட்டை போட்டபடி உள்ளது.

பிரிட்டீஷ் விமானம்

தங்கள் நாட்டைச் சேர்ந்த சுமார் 200 பேரை இங்கிலாந்துக்கு அழைத்து வருவதற்காக பிரிட்டிஷ் விமானம் வியாழக்கிழமை புறப்பட திட்டமிட்டது. ஆனால் அந்த பணியை மேற்கொள்ள முடியவில்லை. இங்கிலாந்தின் வெளியுறவு அலுவலகம், தங்கள் நாட்டினரை விமானத்தில் அழைத்துவர “அவசரமாக வேலை செய்கிறது” என்று அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா தனது நூற்றுக்கணக்கான குடிமக்களை வெளியேற்ற சீன அரசாங்கத்திடம் இன்னும் அனுமதி பெற முடியாமல் தவித்து வருகிறது. நியூசிலாந்து ஒரு தனி மீட்புப் பணியைத் தொடங்கியுள்ளது. இருப்பினும், மீட்பு பணிக்கான, காலக்கெடு உறுதியாக தெரியவில்லை.

விமானங்கள்

பிரான்ஸ், தென் கொரியா மற்றும் பிற நாடுகளும் தங்கள் குடிமக்களை வெளியேற்றுகின்றன அல்லது அவ்வாறு செய்யத் திட்டமிட்டுள்ளன. இந்த வாரம் 2 பிரெஞ்சு விமானங்களில் சுமார் 250 பிரெஞ்சு குடிமக்கள் மற்றும் 100 பிற ஐரோப்பியர்கள் வுஹானிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

ஒரு பக்கம், கொரோனா வைரஸ் தாக்கம் வணிகங்களிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளன. பிரிட்டிஷ் ஏர்வேஸ் உட்பட பல விமான நிறுவனங்கள் சீனாவுக்கான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன.

மெக்டொனால்டு மூடல்

அதே நேரத்தில் டொயோட்டா, ஐக்கியா, ஃபாக்ஸ்கான், ஸ்டார்பக்ஸ், டெஸ்லா மற்றும் மெக்டொனால்டு ஆகியவை சீனாவில் உற்பத்தியை தற்காலிகமாக முடக்குவதற்கு அல்லது அதிக எண்ணிக்கையிலான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு முடிவு செய்த முக்கிய நிறுவனங்களாகும். சீன கால்பந்து சங்கம் அனைத்து உள்நாட்டு விளையாட்டுகளையும் ஒத்திவைத்துள்ளது.

சீனா திட்டம்

புதன்கிழமை வுஹானில் இருந்து வெளியேற்றப்பட்ட கிட்டத்தட்ட 200 அமெரிக்க குடிமக்கள் தெற்கு கலிபோர்னியாவின் ராணுவத் தளத்தில் மூன்று நாட்கள் சோதனை மற்றும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா வைரஸின் அறிகுறிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். சில நாடுகளுக்கு இவ்வாறு குடிமக்களை அழைத்துச் செல்ல அனுமதி கொடுத்த சீனா, மேலும் பல நாடுகளுக்கு அனுமதி கொடுக்கவில்லை. வுகானில் இருப்பதே பாதுகாப்பு என சீனா நினைக்கிறது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »