Press "Enter" to skip to content

ஜாமியா துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை கைது செய்ய டி. ராஜா வலியுறுத்தல்

டெல்லி: ஜாமியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு பாஜகதான் காரணம் என்று ஆம் ஆத்மி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை குற்றம்சாட்டியுள்ளன.

டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கோபால் என்ற மாணவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார்.

நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 8-ந் தேதி நடைபெறும் நிலையில் இச்சம்பவம் முக்கியமான விவாதப் பொருளாகி இருக்கிறது.

இது தொடர்பாக ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறியதாவது: டெல்லியின் சட்டம் ஒழுங்கு நிலைமை எப்படி மோசமாக போயிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஜாமியா பல்கலைக் கழக துப்பாக்கிச் சூடு சம்பவம் வெளிப்படுத்தியிருக்கிறது.

imageதுப்பாக்கியுடன் ஆவேசமாக வந்தார்.. போலீஸ் வேடிக்கை பார்த்துச்சு.. அதிர்ச்சியுடன் விவரிக்கும் மாணவி

பாஜகவின் நன்கு திட்டமிட்ட சதி இது. டெல்லி சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்பதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த வன்முறை சம்பவம். இவ்வாறு சஞ்சய் சிங் கூறினார்.

இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா கூறுகையில், பாஜக தலைவர்களின் வெறுப்பேற்றும் பேச்சுகளின் விளைவுதான் ஜாமியா பல்கலைக் கழக துப்பாக்கிச் சூடு சம்பவம். டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக தலைவர்கள் வெறுப்பை உமிழும் பேச்சுகளை வெளிப்படுத்தினர்.

இதனால்தான் இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராடுவோரை சுட்டுக் கொல்வோம் என்று பேசினார் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர். தற்போதைய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூரை கைது செய்ய வேண்டும் என்றார்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »