Press "Enter" to skip to content

தஞ்சை வாண்டையார் பாலிநுட்பம் கல்லூரியில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தேச தலைவர்களுக்கு மரியாதை அணுசரிப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் புலவர்நத்தில் உள்ள வாண்டையார் பாலிடெக்னிக் கல்லூரியில் தேச தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தியாகிகள் தினம் மற்றும் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கீர்த்திகா நிர்வாக அலுவலர் செந்தில்குமார் டீன் ஜெகதீசன் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதில் மாணவர்கள் நம் தேச தந்தைக்கும் மற்றும் சுதந்திர போராட்டத்தின் போது தங்களது இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகளுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி சமூக ஒற்றுமையை வலியுறுத்தியும் தீண்டாமையை ஒழிக்கவும் உறுதிமொழி ஏற்றுகொண்டனர்.

மேலும் மாணவர்கள் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு தின உறுதிமொழியும் ஏற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி நிறுவனர் குணசேகர வாண்டையார் தாளாளர் விஜயபிரகாஷ் தலைமையில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவபாலன் செய்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட மாவணவர்கள் பலர் கலந்துக் கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »