Press "Enter" to skip to content

அடிதடி வழக்கில் 3 பெண்களை விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்: ஆய்வாளர் கைது

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் அருகே மேலகுடியிருப்பு பகுதியில் ஒரு குடும்பத்தில் பிரச்னை காரணமாக உறவினர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் தங்கவேல் என்பவரின் மனைவி உட்பட 3 பெண்களை, வழக்கில் இருந்து விடுவிக்க, ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கொடுக்குமாறு பார்த்திபனூர் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் கேட்டுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த தங்கவேல், ஒரு வாரத்திற்கு முன்பு ரூ.15 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார்.
மீதி ரூ.5 ஆயிரத்தை தருமாறு இன்ஸ்பெக்டர் ராஜராஜன் அடிக்கடி தொந்தரவு செய்ததால், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தங்கவேல் புகார் தெரிவித்தார். அவர்களின் ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் நோட்டுகளை இன்ஸ்பெக்டர் ராஜராஜனிடம் நேற்று கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார், இன்ஸ்பெக்டர் ராஜராஜனை கைது செய்தனர். இதை அறிந்த சமூக ஆர்வலர் செல்வராஜ், போலீஸ் நிலைய வாசலில் தேங்காய் உடைத்து லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »