Press "Enter" to skip to content

பாராளுமன்ற வளாகத்தில் சோனியா தலைமையில் காங்.-தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பாராளுமன்ற வளாகத்தில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி:

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் தொடர் இன்று தொடங்க உள்ளது. 

இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான இந்த போராட்டத்தில் பங்கேற்ற எம்.பி.க்கள்  அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். 

சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் வேண்டாம், இந்திய அரசியலமைப்பை காப்போம், இந்தியாவை காப்போம் ஆகிய வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »