Press "Enter" to skip to content

மோடி யார் தெரியுமா.. பாகிஸ்தான் அமைச்சர் சவுத்ரிக்கு கெஜ்ரிவால் செம பதிலடி

டெல்லி: நரேந்திர மோடி இந்தியாவுக்கு பிரதமர், எனக்கும் அவர்தான் பிரதமர் என்று பாகிஸ்தான் அமைச்சர் சவுத்ரி பவாத் ஹுசைனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

டெல்லியில் பிப்ரவரி 8ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி, மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் நடுவே தீவிரமான போட்டி நிலவி வருகிறது.

அப்படியிருக்கும் நிலையில், மோடிக்கு ஆதரவாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ள கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

imageகுன்ஹாவிடம் “சிக்கிய” நித்தியானந்தா.. 50 வாய்தாவா.. நீதிபதி ஷாக்.. போலீஸுக்கு அதிரடி உத்தரவு!

மோடி பேச்சு

விஷயம் இதுதான்: பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது இந்தியாவின் ராணுவம் நினைத்தால் ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்களுக்குள் பாகிஸ்தானை தோற்கடித்து விட முடியும் என்று பேசியிருந்தார். இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் பாகிஸ்தான் அமைச்சர் சவுத்ரி பவாத் ஹுசைன். அதில் மோடி பற்றி விமர்சனத்தையும் முன்வைத்திருந்தார்.

நிலைதடுமாற்றம்

மோடியை இந்திய நாட்டு மக்கள் தோற்கடிக்க வேண்டும். டெல்லியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்திக்க உள்ளதால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இந்த பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த மோடி முயற்சி செய்கிறார். பொருளாதார வீழ்ச்சி, ஜம்மு-காஷ்மீர், குடியுரிமை சட்டங்கள் போன்றவற்றுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டில் எழுந்துள்ள எதிர்ப்பு காரணமாக மோடி நிலைதடுமாறி உள்ளார். இவ்வாறு அந்த ட்வீட்டில் கூறப்பட்டு இருந்தது.

எனக்கும் பிரதமர்

இதை அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் அவர், நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர், எனக்கும் அவர்தான் பிரதமர். டெல்லியில் நடைபெறக்கூடிய தேர்தல் என்பது, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். தீவிரவாதத்தின் மிகப்பெரிய ஸ்பான்சர், இதுதொடர்பாக கருத்து தெரிவிப்பதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். பாகிஸ்தான் என்னதான் முயற்சி செய்தாலும், இந்தியாவின் ஒருமைப்பாட்டை அது குலைத்துவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

பாராட்டு

கெஜ்ரிவாலுக்கு, பாகிஸ்தான் அமைச்சர் மறைமுக ஆதரவு தெரிவிப்பதுபோல அவரது ட்வீட் உள்ளது என்று சில பாஜக ஆதரவு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்த நிலையில் கேஜ்ரிவால் இவ்வாறு பாகிஸ்தான் அமைச்சருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதனை பல நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். நமக்குள் ஆயிரம் அரசியல் மோதல்கள் இருந்தாலும் மற்றொரு நாட்டிடம் நமது பிரதமரை விட்டுக் கொடுக்காத தன்மை கேஜ்ரிவாலின் சிறந்த குணம் என்று அவர்கள் பாராட்டுவதை பார்க்க முடிகிறது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »