Press "Enter" to skip to content

நடுத்தெருவில் விழுந்து கிடந்த சடலம்.. வுஹான் நகர கொடுமை.. உலுக்கி எடுக்கும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)

சீனாவில் சாலையில் சுருண்டு விழும் மக்கள்

பீஜிங்: நகரில் தெருவிலேயே சடலம் விழுந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது…! சீனாவின் வுஹான் நகரில் ஒரு பர்னிச்சர் கடை வாசலில் இந்த சடலம் விழுந்தது கிடந்தது.

உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸின் துவக்கம் சீனாவின் வுஹான் நகரில்தான் துவங்கியது.. இந்த பகுதி எப்போதுமே கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் பிஸி பகுதி ஆகும்.. நிறைய ஷாப்பிங் மால்கள், கடைத்தெரு நிறைந்த இடம்.. ஆனால் இப்போது வெறிச்சோடி கிடக்கிறது.. இப்படி நடமாட்டம் இல்லாமல் இருந்ததே கிடையாதாம்.

இந்நிலையில், 60 நபர் மதிக்கத்தக்க ஒருவர் இந்த தெருவில் சடலமாக விழுந்து கிடக்கிறார்.. ஒரு பர்னிச்சர் கடை வாசலில் தரையிலேயே சுருண்டு விழுந்துள்ளார்.. முகமூடி அணிந்திருக்கிறார்.. கையில் பிளாஸ்டிக் ஷாப்பிங் பேக் ஒன்றும் இருந்தது. ஆனால் யாருமே இவரை மீட்கவில்லை.

image15 நாள் தனி அறையில் சோதனை.. கடும் கட்டுப்பாடு.. சீனாவின் வுஹனிலிருந்து இன்று இந்தியா வரும் 400 பேர்

அந்த தெருவில் ஒன்றிரண்டு பேர் மாஸ்க் அணிந்தபடி நடமாடுகிறார்களே தவிர, யாருமே சடலத்தின் அருகே போகவில்லை. அதே வழியில் நிறைய ஆம்புலன்ஸ்கள் சென்றாலும், இந்த சடலத்தை யாருமே மீட்க வரவில்லை..

ஷாப்பிங் செய்ய வந்திருந்தவர் எப்படி இறந்தார் என்றே தெரியவில்லை.. ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் இந்த சடலத்தை பார்த்து, ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லி உள்ளனர்.. அதற்கு பிறகுதான் எமர்ஜென்சி வண்டி வந்தது.. அவர்கள் இந்த சடலத்தின் மீது ஒரு வெள்ளை போர்வையை போர்த்திவிட்டு சென்றுவிட்டனர்.

இதன்பிறகு போலீஸார் அந்த சூப்பர் மார்க்கெட் பகுதியை கார்ட்போர்டு பெட்டிகள் மூலம் மறைத்தனர். உடனடியாக தொற்று மருந்து அடிக்கப்பட்டது. இதுவரை சீனாவில் 213 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.. இதைதவிர, வுஹானில் உள்ள ஆஸ்பத்திரிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கிறதாம்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »