Press "Enter" to skip to content

ஒரே நாளில் 45 பேர் மரணம்.. 11,000 பேருக்கு பாதிப்பு.. சீனாவில் தீவிரம் அடைந்த கொரோனா.. அதிர்ச்சி!

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 258 ஆகியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் எல்லோரும் நினைத்தை விட வேகமாக பரவி வருகிறது. தொடக்கத்தில், முதல் ஒருவாரம் மட்டும் கொரோனா வைரஸ் மிக மெதுவாக பரவியது. ஆகவே இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.

மக்கள் யாரும் இதனால் பெரிய அளவில் இறக்க மாட்டார்கள் என்று சீன அரசு கருதியது. இதனால் சீன அரசு இதில் மெத்தனமாக இருந்தது. ஆனால் போக போக கொரோனா வைரஸ் வேகம் எடுக்க தொடங்கியது.

imageகம்ப்யூட்டர்கள்.. மொபைல்களையும் தாக்கும் கொரோனா வைரஸ்.. காஸ்பெர்ஸ்கை ஆண்டி வைரஸ் எச்சரிக்கை

எப்படி வைரஸ்

கொரோனா வைரஸ் காரணமாக சீனா மொத்தமாக நடுங்கிப் போய் உள்ளது. சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய இந்த வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவு கூடியது. கொரோனா வைரஸ் காரணமாக மொத்தமாக சீனாவில் வுஹன் நகரம் மூடப்பட்டுள்ளது. இதனால் சீனாவின் வுஹன் நகரம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் வுஹன் நகரம் மூடப்பட்ட பிறகும் கூட இந்த வைரஸ் வெளியே பரவி வருகிறது.

தாக்குதல்

தற்போது இந்த வைரஸ் இன்னும் தீவிரம் அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பலி எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 258 ஆகியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 45 பேர் பலியாகி இருக்கிறார்கள். கொரோனா தாக்குதல் உடன் நேற்று மட்டும் 2 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டார்கள். மொத்தம் 11 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் மூலம் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

என்ன சார்ஸ்

இன்னொரு பக்கம் இந்த கொரோனா வைரஸ் சார்ஸை விட கொடூரமான வைரஸ் என்பதும் நிரூபணம் ஆகி உள்ளது. அதன்படி சார்ஸ் நோய் 167 பேரில் இருந்து 5050 பேருக்கு பரவ மொத்தம் 37 நாட்கள் ஆனது. ஆம் முதலில் மெதுவாக பரவிய சார்ஸ் நோய் பின் வேகம் எடுத்தது. அதன்பின் தீவிரம் அடைந்தது. ஆனால் கொரோனா வைரஸ் சார்சை விட மோசமானது ஆகும். இது முதலில் 90 பேருக்கு பரவ தாமதம் ஆனது. ஆனால் 90 பேரில் இருந்து 11 ஆயிரம் பேருக்கு வெறும் 14 நாட்களில் இந்த கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

எங்கு எல்லாம்

இந்த வைரஸ் தற்போது சீனாவில் மட்டும் பரவவில்லை. உலகம் முழுக்க 22 நாடுகளில் இந்த வைரஸ் பரவி இருக்கிறது. பிரிட்டன், ஆஸ்திரேலியா, தென் கொரியா, சிங்கப்பூர், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. அதேபோல் ஆசியாவில் பல முக்கிய நாடுகள், ஐரோப்பா, தென் அமெரிக்காவில் உள்ள நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் ஆகிய நாடுகளிலும் சிலர் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். இந்தியாவில் ஒருவர் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »