Press "Enter" to skip to content

முதல்வர் எச்சரித்தும் அடங்காமல் துள்ளி குதிக்கும் அமைச்சர்… செம காண்டில் எடப்பாடி..!

முதல்வர் இதுவரை பலமுறை உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அதை மீறியும் பல அமைச்சர்கள் ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளது எடப்பாடியை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போது ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் அனைவரும் வாயை மூடிக்கொண்டே பேசிவந்தனர். ஆனால், ஜெயலலிதா மறைவை அடுத்து அமைச்சர்கள் தான்தோன்றி தனமாக வாய்க்கு வந்தபடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர்.

சமீபத்தில் அமைச்சர் பாஸ்கரன், `பாஜவை எப்போது கழட்டி விடலாம்னு நாங்கள் நினைக்கிறோம்னு’ பேட்டி கொடுத்தார். இது எடப்பாடிக்கு தெரிந்ததும், பாஸ்கரனை சத்தம் போட்டார். அவ்வளவுதான் மாலையிலேயே தான் அப்படி பேசவில்லை என்று அமைச்சர் பல்டி அடித்தார். அதேபோல, ஒவ்வொரு விவகாரத்திலும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, கருப்பண்ணன் ஆகியோர் இஷ்டத்துக்கு பேச ஆரம்பித்தனர். ரஜினி விவகாரத்தில், பெரியாருக்கு ஆதரவாகவும், ரஜினியை கண்டித்தும் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் பேட்டியளித்தனர். 

ஆனால், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ, ரஜினிக்கு ஆதரவாக பேட்டி அளித்தார். அதேபோல், சசிகலா விரைவில் சிறையில் வெளிவரவேண்டும் என பிராத்திகிறேன் எனவும் தெரிவித்தார். இது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது கட்சிக்குள் கடும் விமர்சனத்தை எழுந்தன. மேலும், ஆளும் கட்சியினரிடையே ஒருமித்த கருத்து இல்லை என்று பலர் கூறி வந்ததால் முதல்வர் எடப்பாடியை எரிச்சல் அடைய செய்தது. இதனையடுத்து, அமைச்சர்களை தலைமைச்செயலகத்தில் வைத்து தனித்தனியாக அழைத்து கடுமையாக கண்டித்துள்ளார். பின்னர், தேவையில்லாத எந்த கருத்துகளையும் பொதுவெளியில் பேச வேண்டாம் என்று அமைச்சர்களை எச்சரித்தார்.

இந்நிலையில், முதல்வர் இதுவரை பலமுறை உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அதை மீறியும் பல அமைச்சர்கள் ஊடகங்களில் பேசிவந்தனர். தற்போது, முதல்வர் கடைசியாக இட்ட உத்தரவு, அமைச்சருக்கான மாண்பு ஆகியவற்றையெல்லாம் மீறி கையை முறிப்போம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளது யார் பேச்சையும் கேட்கமாட்டேன் என்ற தொனியில் பேசியுள்ளதாகவே கருதப்படுகிறது. இவரது பேச்சு முதல்வரை எரிச்சல் அடைய செய்துள்ளது.

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »