Press "Enter" to skip to content

அதே சிவப்பு துணி.. மாமியார் உருவாக்கியது.. சிறப்பு பூஜை செய்து கொண்டு வந்த நிர்மலா சீதாராமன்!

டெல்லி: 2020 பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வருடம் போல இந்த வருடமும் சிவப்பு நிற பை ஒன்றை பயன்படுத்தி உள்ளார்.

இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போதெல்லாம் அதை நிதி அமைச்சர்கள் சூட் கேஸ் ஒன்றில் கொண்டு வருவதுதான் வழக்கம். இந்தியாவில் பிரிட்டன் அரசு ஆட்சி செய்த போது இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது. 1860-ம் ஆண்டு பிரிட்டன் அரசவையில் வில்லியம் கிளாட்ஸ்டோன்தான் இந்த சூட்கேஸ் முறையை கொண்டு வந்தார்.

அப்போதில் இருந்தே இந்தியாவில் நிதி அமைச்சர்கள் எல்லோரும் சூட் கேஸ் பயன்படுத்தும் வழக்கத்தை பின்பற்றி வருகிறார்கள். 2019ம் ஆண்டு வரை இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. அதே சமயம் வெவ்வேறு நிறத்தில் சூட்கேஸ் வண்ணங்கள் மட்டும் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக ஜவஹர்லால் நேரு கருப்பு சூட்கேஸில் பட்ஜெட்டை கொண்டு வந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் முதல் முறையாக இந்த சூட்கேஸை துறந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு பதிலாக சிவப்பு நிற துணியில் பட்ஜெட்டை கொண்டு வந்தார்.

இந்த துணி அவரின் மாமி செய்து கொடுத்தது ஆகும். இந்த துணி சிவப்பு நிறத்தில் இருக்கும். நடுவில் அசோகா சின்னத்தில் இருக்கும் சிங்கம் இடம்பெற்று இருக்கும். மஞ்சள் நிறத்தில் இரண்டு கோடுகளும் இருக்கும்.

இதைத்தான் கடந்த முறை அவர் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது பயன்படுத்தினார். இந்த வருடமும் இதே துணியைத்தான் அவர் பட்ஜெட் தாக்கல் செய்ய கொண்டு வந்துள்ளார். விநாயகர், ஆஞ்சிநேயர் உள்ளிட்ட கடவுள்கள் முன்னிலையில் வைத்து இதை பூஜை செய்துவிட்டு, பட்ஜெட் தாக்கல் செய்கிறார், நிர்மலா சீதாராமன்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »