Press "Enter" to skip to content

நாடு முழுக்க பைபர் ஆப்டிக்ஸ்.. வருகிறது ஏஐ.. ‘டெக்கி’ கிராமங்களை உருவாக்க நிர்மலா அசத்தல் அறிவிப்பு!

டெல்லி: பைபர் ஆப்டிக்ஸ் எனப்படும் கண்ணாடி இழை தொடர்புகள் மூலம் 1 லட்சம் கிராமங்கள் இணைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இன்று நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகளை தற்போது நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் மீது நிர்மலா சீதாராமன் கவனம் செலுத்தினார்கள். விவசாயம் தொடங்கி உள்கட்டமைப்பு வரை பல துறைகளில் இவர் கவனம் செலுத்தினார். இந்த நிலையில் இணையம் சார்பாக இவர் வெளியிட்ட அறிவிப்புகள் அதிக கவனம் பெற்றுள்ளது.

அதில், பைபர் ஆப்டிக்ஸ் எனப்படும் கண்ணாடி இழை தொடர்புகள் மூலம் 1 லட்சம் கிராமங்கள் இணைக்கப்படும். அதேபோல் நாடு முழுக்க தொழில்நுட்பம் சார்ந்த கூடங்கள் அமைக்கப்படும், டேட்டா சென்டர்கள் என்று இது அழைக்கப்படும். நாடு முழுக்க இது அமைப்பதும்.

இங்கு ஏஐ தொழில்நுட்பங்கள் கற்பிக்கப்படும். இது தொடரான வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும். மொத்தம் 8000 கோடி ரூபாய் இதற்கு வழங்கப்படும். இதற்கான திட்டங்கள் உருவாக்கப்படும். கிராமங்களில் இணையம் கொண்டு வர 6000 கோடி ரூபாய் அளிக்கப்டும்.

பாரத் நெட் மூலமா இந்த இணையம் அளிக்கப்படும். இந்தியா முழுக்க இணையம் தொடர்பான தகவல்கள், ஒருங்கிணைக்கப்படும், என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »