Press "Enter" to skip to content

முன்னேற்றம் ஏற்படும்.. இந்தியாவின் நாமினல் ஜிடிபி 10% ஆக இருக்கும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

டெல்லி: 2020-21ம் ஆண்டிற்கான இந்தியாவின் நாமினல் ஜிடிபி 10% ஆக இருக்கும் என்று மத்திய அரசு சார்பாக கணிக்கப்பட்டுள்ளது. நாமினல் ஜிடிபி என்பது ஜிடிபியை கணக்கிடும் முறைகளில் ஒன்றாகும்.

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஆகும் இது. கடந்த காலாண்டிற்கான ஜிடிபி ஏற்கனவே 5% என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவே 6 ஆண்டுகளில் மிக குறைவான ஜிடிபி ஆகும்.

இப்படி தொடர்ந்து ஜிடிபி சரிந்து வருவது எல்லோரையும் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அரசு இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திணறி வருகிறது. இந்த நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள பட்ஜெட் அறிவிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்தியாவின் ஜிடிபி பெரிய அளவில் முன்னேற்றம் அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் 2020-21ம் ஆண்டிற்கான இந்தியாவின் நாமினல் ஜிடிபி 10% ஆக இருக்கும் என்று மத்திய அரசு சார்பாக கணிக்கப்பட்டுள்ளது. நாமினல் ஜிடிபி என்பது ஜிடிபியை கணக்கிடும் முறைகளில் ஒன்றாகும்.

மத்திய பட்ஜெட் தாக்கலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள், கடந்தாண்டைவிட நடப்பாண்டில் கடன் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் – கடந்த 6 ஆண்டுகளில் நாட்டின் கடன் ஜிடிபி 52 % இருந்து 48% குறைந்துள்ளது.

இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை இந்த 2020 நிதி ஆண்டியில் 3.8% ஆக இருக்கும். அடுத்த 2021ம் ஆண்டு நிதி ஆண்டில் 3.5% ஆக இருக்கும், என்று நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், முன்னதாக 2020 மொத்த ஜிடிபி 6.1% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அது மேலும் குறையும் என்று ஆர்பிஐ கூறியது. அதன்படி 2020ல் மொத்த ஜிடிபி 5% ஆக குறையும் என்று ஆர்பிஐ சார்பாக கணிக்கப்பட்டுள்ளது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »