Press "Enter" to skip to content

பான் அட்டை வாங்குவதில் புதிய நடைமுறை.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சென்னை: விண்ணப்பங்களை நிரப்பி இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் ஆதார் எண் அடிப்படையில் உடனடியாக பான் கார்டு வாங்கிக்கொள்ளலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இரண்டாவது ஆண்டாக பட்ஜெட் உரையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அப்போது பான் கார்டு பெறுவதற்கான முறைகள் எளிதாக்கப்படும் என்று அறிவித்தார்.

இதுகுறித்து நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் ”பான்கார்டு வாங்க விரும்புவோர் இனிமேல் விண்ணப்பங்களை நிரப்பி விண்ணபித்து வாங்க தேவையில்லை. அந்த நடைமுறை இனி இல்லை. இனிமேல் ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைன் முறையில் உடனடியாக பான் கார்டு வாங்கிக் கொள்ளலாம்” என்றார்.

imageவருமான வரி குறைப்பால் பலன் இல்லையா? கொடுப்பதை போல கொடுத்து வேறு இடத்தில் எடுத்த அரசு!

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »