Press "Enter" to skip to content

மத்திய வரவு செலவுத் திட்டம் விவசாயிகளுக்கு மரணப் வரவு செலவுத் திட்டம்..!! போட்டு உடைக்கும் விவசாயச் சங்கத் தலைவர்..

விவசாயிகளின் வருமானத்தை நடப்பாண்டு 2020-21 பட்ஜெட் இரட்டிப்பாகும் இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான பட்ஜெட் என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பாஜக விற்கு  இந்த பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் என பதிலடி கொடுத்திருக்கிறார் அகிலஇந்திய கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பு  தலைவர் ரவீந்திரன்.

விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் ஏமாற்றம் தரக்கூடிய வகையில் அமைந்திருப்பதாக எப்படி சொல்லுகிறீர்கள். என்று கேட்டோம். விவசாயிகள் வருமானம் 2022ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும் என்று தேர்தல் அறிக்கையிலேயே சொல்லியிருக்கிறது பாஜக. ஆனால் அதற்கான ஆலோசனைகளை சொல்லவில்லை. எம்எஸ் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் உற்பத்தி செலவு தொகையை விட ஐம்பது சதவீதம் விலை கிடைப்பது போல் இருக்கவேண்டும். அதைப்பற்றி இந்த அறிக்கையில் இடம் பெறவில்லை.
டெல்லி சென்று விவசாயிகள் நிர்வாணமாக போராடினார்கள். விவசாயிகள் என்ன கேட்டார்கள் .இந்த ஒருமுறை விவசாயிகள் கடனை தள்ளுபடி பன்னுங்க என்று தான் போராடினார்கள். மத்திய அரசிற்கு 82 கோடி ரூபாய் தள்ளுபடி செய்வது பெரிய விசயமல்ல. ஏனென்றால் கார்ப்ரேட் முதலாளிகளுக்கு  2.15 லட்சத்து பதினைந்தாயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது பாஜக. 

பசியால் இருக்கும் நாடுகள் 149. அதில் இந்தியா103 வது இடத்தில் பசியால் அவதிப்படுவோர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. ஆக உணவு மானியத்தில் எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட் சொல்ல வில்லை. இந்தியா முழுவதும் 7.13 ஆயிரம் டன் உணவு தானியம் பயன்படுத்த முடியாத படி எலி தொல்லையாலும் மழையால் மக்கி போயும் இருக்கிறது. ஆடு மாட்டிற்கு போட்டல் கூட  அந்த தானியத்தை சீண்டாது.
உரத்திற்கான மானியம் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் உரம் விலை அதிகரிக்கும்.உற்பத்தி செலவு கூடும். இதனால் பாதிக்கப்படு விவசாயிகள் தான். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு பற்றி எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.
கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு ஆலை முதலாளிகளிடம் இருந்து வரவேண்டிய பணம் மட்டும் 24 ஆயிரம் கோடி பாதி;ப்படைந்திருக்கிறது. தமிழகத்தில் 1500 கோடி தனியார் கரும்பு ஆலை முதலாளிகள்  தரவேண்டி இருக்கிறது. கரும்புக்கு மத்திய அரசு விலை டன்னுக்கு ரூ2750 என நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால் நாங்கள் கேட்டது டன் ஒன்றுக்கு 4500 கேட்டிருந்தோம். கரும்பு விவசாயிகளுக்கு என்று எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.


விளைபொருட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை விளைபொருட்களை ஏற்றிச்செல்ல தனியார் ரயில் விமானம் எல்லாம் தனியார் மயமாக்கப்படுவதற்கு அடித்தளமிட்டிருக்கிறது. இதுயெல்லாம் விவசாயிகளுக்கு தெரியாது என்று பாஜக நினைத்தால் அது அவர்களின் அறியாமை.
இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு விரோதமாகவும் கார்ப்ரேட் முதலாளிகளுக்கு எப்படியெல்லாம் உதவ முடியுமோ அந்த அளவிற்கு உதவக்கூடிய பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது.

TBalamurukan

 

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »