Press "Enter" to skip to content

சிட்னி நகரம் போல் மதுரை நகரம் மாறப்போகிறது என்கிற மதுரக் காரன் எனது ஆசையைக் கூட சொல்ல விட மாட்றீங்க..! மீம்ஸ் போட்டு கலாய்க்குறீங்க..! அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதங்கம் .

மதுரை மாநகராட்சிப் பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் இணைந்து,  வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்திலிருந்து சுத்தப்படுத்தும் பணியைத் துவக்கி வைத்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்,

2020 டிசம்பர் மாத இறுதிக்குள் ஒரு சொட்டுக் கழிவு நீர் கூட கலக்க முடியாத படி, ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மதுரையை ஸ்மார்ட் சிட்டி ஆக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

உண்மையில் மதுரை புதுமையான நகரமாக மாற உள்ளது. வாட்சப்பில் எதற் எதற்கோ வாக்களிக்கும் மக்கள், மதுரை மாநகராட்சிப் பணிகளை பாராட்டி வாக்களிக்க வேண்டும். மதுரையை சிறந்த மாநகராட்சியாகத் தேர்ந்தெடுக்க பிப்ரவரி 21ம் தேதி வரை மக்கள் வாட்சப்பில் வாக்களிக்க வேண்டும். 

ஸ்மார்ட் சிட்டி பணிகளால் மதுரை விரைவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைப் போல மாறப் போகிறது. இதைச் சொன்னால் மீம்ஸ் போட்டு என்னைக் கலாய்க்குறீங்க. மதுரைக்காரன் நான். என் ஆசையைக் கூட நான் சொல்லக் கூடாதா? நமது மதுரையை மாமதுரையாக மாநகராட்சி அதிகாரிகள் உருவாக்கி உள்ளனர் என அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டினார்.

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »