Press "Enter" to skip to content

5 மாத கர்ப்பிணி மகள் மீது.. துடிக்க துடிக்க ஆசிட் ஊற்றிய பெற்ற தந்தை.. திருவள்ளூரில் பயங்கரம்

சென்னை: வீட்டுக்கு தெரியாமல் மகள் கல்யாணம் செய்து கொண்டார்.. இப்போது மகள் 5 மாத கர்ப்பிணி.. இந்த விஷயம் தெரிந்த பெற்ற தந்தை மகளின் முகத்தில் ஆசிட்டை வீசி கொல்ல பார்த்துள்ளார்.. இந்த சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு டன்லப் நகரை சேர்ந்த தம்பதி பாலாஜி – பாக்கியலட்சுமி… இவர்களது மகன் சாய்குமார்.. 24 வயதாகிறது.. ஏசி மெக்கானிக்காக சென்னையில் வேலை பார்க்கிறார்.

இவர் தங்கியிருந்த வீட்டின் அருகே தீபிகா என்ற பெண்ணை காதலித்தார்.. தீபிகாவின் அப்பா விருப்ப ஓய்வு பெற்ற ஏட்டு பாலகுமார் ஆவார்.. 6 வருடமாக தீபிகாவும் – சாய்குமாரும் காதலித்து வருகிறார்கள். விஷயம் வீட்டுக்கு தெரிந்தது.

தீபிகா

மகளை கண்டித்தும் கேட்கவில்லை.. காதலின் ஆழம் அதிகமாக உள்ளது என்பதை புரிந்து கொண்ட ஏட்டு, மகளுக்காக உடனடியாக வீட்டை காலி செய்து, திருத்தணி அடுத்த பூனிமாங்காடு கிராமத்துக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார்.. அங்கு ஒரு காலேஜில் தீபிகாவை சேர்த்தார்.. மேலும் மகள் ஒழுங்காக காலேஜுக்கு போகிறாரா, இல்லையா, யாரையாவது சந்திக்க போய்விடுகிறாரா என்று பின்னாடியே சென்று நோட்டீஸ் பண்ணி கொண்டிருந்தார்.

காதல் திருமணம்

பெற்ற அப்பா இப்படி பின்னாடியே வந்து கண்காணிப்பதை அறிந்த தீபிகா மனமுடைந்து சாய்குமாருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். பேசுவதற்கே இவ்வளவு தடை என்றால், கண்டிப்பாக கல்யாணம் செய்து வைக்க மாட்டார்கள் என்று நினைத்து வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்.. கடந்த ஜுன் மாதம், பெங்களூரில் கல்யாணம் செய்து கொண்டனர்.. இதை கேட்டு ஏட்டுக்கு இன்னும் கோபம் வந்துவிட்டது.

5 மாத கர்ப்பிணி

சில மாதங்கள் கழித்து பெங்களூரில் இருந்து வேப்பம்பட்டில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு தீபிகாவுடன் வந்தார் சாய்குமார். தீபிகா 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த விஷயம் ஏட்டுக்கு தெரிந்தது. அதனால் இன்னும் ஆத்திரமடைந்த அவர், சம்பவத்தன்று 4 பேரை கூட்டிவந்து மகளை சந்தித்தார்.. ஆத்திரம், ஆவேசம் எதையுமே மகளிடம் அவர் காட்டிக் கொள்ளவில்லை. “அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. வீட்டுக்கு வந்து ஒருமுறை அம்மாவை பார்த்துட்டு வா” என்றார்.

ஆசிட் வீச்சு

ஆனால் தீபிகா மேலும் பயந்துகொண்டு வர முடியாது என்று மறுத்துள்ளர்.. இதனால் ஆத்திரமடைந்த ஏட்டு பாலகுமார், மறைத்து வைத்திருந்த ஆசிட்டை தீபிகாவின் முகத்தில் வீசினார். அதை பார்த்து பதறி கொண்டு வந்த மாமியார் பாக்கியலட்சுமி, உறவினர் திவ்யா ஆகியோர் மீதும் வீசினார். பின்னர் தீபிகாவை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தி வந்திருந்த 4 பேர் துணையுடன் சென்றார்.

சிகிச்சை

இதுபற்றி செவ்வாப்பேட்டை போலீசுக்கு தகவல் சொல்லவும், விஷயம் அறிந்த ஏட்டு, வேப்பம்பட்டு சாலையில் மகளை காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பினார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து முகம் வெந்துபோய்.. கருகி கொண்டிருந்த தீபிகா மற்றும் வீட்டில் இருந்த பாக்கியலட்சுமி, திவ்யா ஆகியோரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.. அங்கு இவர்களுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »