Press "Enter" to skip to content

என்ன ஒரு பாசம்.. சென்னை, பெங்களூர் மீது தனி அக்கறை காட்டிய நிர்மலா சீதாராமன்.. ஆனால்..!

சென்னை: 2020 பட்ஜெட் அறிவிப்பில் சென்னை மற்றும் மற்றும் பெங்களூருக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூடுதலாக முக்கியத்துவம் அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இரண்டாவது முறையாக தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் மூலம் பண தட்டுப்பாடு, நிதி பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். இந்த பட்ஜெட் மூன்று விஷயங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. 1. ஆர்வமிக்க இந்தியா, 2. பொருளாதார வளர்ச்சி மற்றும் 3. அக்கறையுள்ள சமூகம் ஆகிய மூன்று விஷயங்களை மையமாக வைத்து இந்த பட்ஜெட்டை உருவாக்கினேன் என்று குறிப்பிட்டார்.

imageபட்ஜெட் 2020: நேரடி வரி வழக்குகள் எண்ணிக்கையை குறைக்க விவாத் சே விஸ்வாஸ் திட்டம்

சென்னை எப்படி

இந்த நிலையில் இந்த பட்ஜெட் அறிவிப்பில் சென்னை மற்றும் மற்றும் பெங்களூருக்கு கொஞ்சம் நிர்மலா சீதாராமன் முக்கியத்துவம் அளித்துள்ளார். சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை புதிதாக அமைக்கப்படும், இந்த பகுதியில் உள்கட்டமைப்பு வசதி அதிகமாக மேம்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை பெங்களூர் இடையே அமைக்கப்படும் இந்த சாலை வர்த்தக வழித்தடமாக் இருக்கும். இந்த சாலை இருக்கும் பகுதியில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

பெங்களூர் நிலை

டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் 2023க்குள் முடிக்கப்படும், என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சென்னை – பெங்களூர் இடையே போக்குவரத்து மிகவும் எளிதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது பல வருடங்களாக வைக்கப்பட்ட கோரிக்கை ஆகும். இதன் மூலம் சென்னை – பெங்களூர் போக்குவரத்து 3 -4 மணி நேரங்களில் எளிதாக மேற்கொள்ள முடியும் என்று கூறுகிறார்கள். இரண்டு நகரமும் வேகமாக வளரும் என்று கூறப்படுகிறது.

சாலை என்ன

இந்த சாலை வரும் நிலையில் ஓசூரும் முன்னேற்றம் அடையும். ஏற்கனவே ஓசூர் பெங்களூருக்கு இணையாக முன்னேறி வருகிறது. இந்த சாலை ஓசூரை இன்னும் முன்னேற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போது பெங்களூர் புறநகர் ரயில் செயல்படுத்தப்பட உள்ளது. பெங்களூரு நகரில் 18,600 கோடி செலவில் புற நகர் ரயில் திட்டம் அறிமுகம் செய்யப்படும். ரயில் பாதைகளை மின்மயமாக்க ரூ.27,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடும் நெரிசல்

பெங்களூரில்தான் உலகிலயே அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. அங்கு புறநகர் ரயில் இல்லாதது இதற்கு முக்கிய காரணம். இதனால் அங்கு புறநகர் ரயில் வேண்டும் என்று மககள பல மாதங்களாக கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரயில்வே தொடார்பான் அறிவிப்பில் இதுதான் மிக முக்கியமான அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தேஜஸ்

அதேபோல் இந்தியாவில் கூடுதலாக தேஜஸ் விமானங்கள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழர்களின் இன்னொரு கோரிக்கையும் நிரைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் தூத்துக்குடியில் உள்ள ஆதிச்சநல்லூர் உட்பட ஐந்து இடங்களில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மொத்தம் நாடு முழுக்க ஐந்து இடங்களில் அருங்காட்சியம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ராக்கிகார்க்கி, ஹஸ்தினாபோர், சிவ்சாகர், தோலாவீரா மற்றும் ஆதிச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

கேரளா இல்லை

ஆனால் இந்த பட்ஜெட்டில் கேரளா தொடர்பான அறிவிப்புகள் எதுவும் இல்லை. கேரளாவின் வரி ஷேரும் 17800 கோடி ரூபாயில் இருந்து 15,000 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கேரளா அரசு இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. கேரளாவில் உள்ள அரசியல் கட்சிகள் இதற்கு கடுமையான கண்டனங்கள் தெரிவித்துள்ளது. கேரளாவில், வேறு கட்சி ஆட்சி செய்யலாம்.இங்கு பாஜக வலிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதற்காக எங்களை பட்ஜெட்டில் புறக்கணிக்க கூடாது. இந்தியாவின் ஜிடிபியில் நாங்களும் அதிக அளவில் பங்கு வகிக்கிறோம் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தெலுங்கானா எப்படி

அதேபோல் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா அரசும் இந்த பட்ஜெட்டை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் வரி ஷேர் 19718 ரூபாயில் இருந்து 15718 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அம்மாநில அரசை இது கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.மேலும் ஆந்திர பிரதேசத்தின் வரி ஷேர் 19781 கோடி ரூபாயில் இருந்து 16 ஆயிரம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நலத்திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குற்றச்சாட்டாக எழுந்துள்ளது.

தென்னிந்தியா

தென்னிந்தியாவில் பல மாநிலங்களை முக்கியமாக புறக்கணித்துவிட்டார்கள். கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருக்கிறது, தமிழகத்தில் பாஜகவின் கூட்டணியில் உள்ள கட்சி ஆட்சியில் இருக்கிறது. அதனால் இங்கு அதிக திட்டங்கள் வந்துள்ளது என்று புகார்கள் எழுந்துள்ளது. வடமாநிலங்களுக்கும் அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராஜ்ய சபா எம்பி ஆவார். அதேபோல் இவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »